உயிரிழந்தவர் திரும்பி வந்தால் அதிர்ச்சி: குடும்பத்தினருக்கு சாம்பல் கலசம், இறப்பு சான்றிதழ் அதிகாரிகள்
உயிரிழந்து விட்டதாக சாம்பல் கலசம் மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்ட நபர் உயிருடன் வந்ததால் அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
உயிருடன் வந்த நபர்
அமெரிக்காவின் ஒரிகான்(Oregon) பகுதியை சேர்ந்தவர் டைலர் சேஸ்(Tyler Chase), இவர் சாலையில் நடந்த போதைப்பொருள் துஷ்பிரயோகத்தில் சிக்கி அதிகப்படியான போதைப்பொருள் எடுத்துக் கொண்ட பின்னர் மீட்பு திட்ட மையத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
அவர் உயிரிழந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு சாம்பல் கலசம் மற்றும் இறப்பு சான்றிதழையும் அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட 23 வயது இளைஞர் டைலர் சேஸ், அதிர்ச்சி அளிக்கும் விதமாக மீண்டும் உயிருடன் வந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழப்பமடைந்த அதிகாரிகள்
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உணவு உதவி பலன்களை பெறுவதற்காக சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு டைலர் சேஸ் சென்றுள்ளார்.
உயிரிழந்ததாக சொல்லப்பட்ட நபர் உணவு உதவி பலன் கோரி வந்து நின்றதை கண்டு பதற்றத்தில் குழப்பமடைந்த அதிகாரிகள், அடையாள அட்டைகள் மற்றும் விவரங்களை விசாரிக்க தொடங்கியுள்ளனர்.
அப்போது நீங்கள் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளதே என்று அதிகாரிகள் கேள்வி எழுப்பவே, ஆமாம் “போதைப்பொருள் மீட்பு திட்ட மையத்தில் நான் சேர்க்கப்பட்டு இருந்த என்னுடைய பணப்பையை திருடிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அப்போது அவரிடம் இருந்த என்னுடைய பணப்பையில் இருந்த தற்காலிக அடையாள அட்டையை பார்த்து, உயிரிழந்தது நான் தான் என அவர்கள் முடிவு செய்துவிட்டனர்.
மேலும் சாம்பல் கலசம் மற்றும் இறப்பு சான்றிதழையும் எனது குடும்பத்தினருக்கு அனுப்பிவிட்டனர் என முழு கதையையும் டைலர் சேஸ் தெரிவித்துள்ளார்.