அயோத்தியில் ராமர் கோவில்.. 74 சதவீத முஸ்லீம்கள் ஆதரவு.. ஆய்வில் தகவல்..!

யோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படுவதற்கு 74% முஸ்லிம்கள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் வரும் 22ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் குஜராத்தை சேர்ந்த தொண்டு நிறுவனம் இந்த கோயில் குறித்து நாடு முழுவதும் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.

இந்த ஆய்வின்படி கடவுள் ராமர் இருக்கிறார் என்றும் இந்தியாவின் மிகப்பெரிய சாதனையை பிரதமர் மோடி செய்து உள்ளார் என்றும் இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமும் ராமர் கோவிலை ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த ஆய்வின்போது பல முஸ்லிம்களை ஜெய்ஸ்ரீராம் என்று வெளிப்படையாக கூறியதாகவும் அயோத்தி ராமர் கோவிலை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம், வரவேற்கிறோம் என 74 சதவீத முஸ்லிம்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிரதமர் மோடி உலகின் மிகப்பெரிய சக்தியாக இருக்கிறார் என்று 70% முஸ்லிம்கள் உணர்கின்றனர் என்றும் எதிர்க்கட்சிகளுக்கு மோடி மீது குறை சொல்றதுக்கு எந்த விவகாரமும் இல்லை என்றும் இந்த ஆய்வில் பலர் தெரிவித்துள்ளனர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *