வரலாற்றில் முதன்முறை! புத்தாண்டில் ஒரே நாளில் மட்டும் இத்தனை லட்சம் பேர் மெட்ரோவில் பயணமா
நாட்டின் முக்கியமான நகரங்களில் ஒன்று டெல்லி. நாட்டின் தலைநகரமான டெல்லியில் பல மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர்.
2024ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பை மக்கள் சிறப்பாக கொண்டாடினர். புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு மக்கள் குடும்பங்களுடன் கோயில்கள், பூங்காக்கள், கடற்கரைகள், வணிகவளாகங்கள், திரையரங்குகளுக்கு சென்று மகிழ்ந்தனர்.
67.47 லட்சம் மக்கள்:
டெல்லியில் புத்தாண்டு பிறப்பான ஜனவரி 1ம் தேதி மெட்ரோவில் மட்டும் 67.47 லட்சம் மக்கள் பயணித்துள்ளனர். கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தாண்டு இந்தளவு மக்கள் மெட்ரோவில் பயணித்துள்ளனர். கடந்தாண்டு ஜனவரி 1ம் தேதி 49.16 லட்சம் மக்கள் பயணித்துள்ளனர். கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் 17 லட்சம் மக்கள் அதிகளவில் மக்கள் பயணித்துள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியன்று 23.66 லட்சம் மக்கள் டெல்லி மெட்ரோவில் பயணித்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு 18.07 லட்சம் மக்கள் மட்டுமே மெட்ரோவில் பயணித்துள்ளனர். அந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மெட்ரோவில் பயணித்தோரின் எண்ணிக்கை மிக மிக குறைவாக அமைந்தது.
குவிந்த மக்கள்:
கடந்த 2020ம் ஆண்டு டெல்லி மெட்ரோவில் 55.26 லட்சம் மக்கள் புத்தாண்டு தினத்தில் பயணித்தனர். கடந்த 2019ம் ஆண்டு 50.16 லட்சம் மக்கள் பயணித்தனர். கடந்த 6 ஆண்டுகள் தரவுகளின் படி, டெல்லி மெட்ரோவில் முன்னெப்போதும் இல்லாத அளவு புத்தாண்டு தினத்தில் மக்கள் பயணித்துள்ளனர்.
இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் டெல்லியில் உள்ள ராஜீவ் சௌக், படேல்சௌக் மற்றும் மத்திய தலைமைச் செயலகங்களில் மக்கள் வரிசை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வௌியில் வரை டிக்கெட் எடுக்க நின்றனர்.
டிசம்பர் 31ம் தேதி:
கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி கடைசி நாள் மட்டும் டெல்லியில் மெட்ரோவில் 48.16 லட்சம் மக்கள் பயணித்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி 55.29 லட்சம் மக்கள் பயணித்ததே கடந்த 6 ஆண்டுகளில் டிசம்பர் 31ம் தேதி அதிகளவு பயணிகள் பயணித்ததே அந்தாண்டு மட்டுமே ஆகும். கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி 50.67 லட்சம் மக்கள் மெட்ரோவில் டெல்லியில் பயணித்துள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி 18.86 லட்சம் மக்கள் பயணித்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி 27.45 லட்சம் மக்கள் மெட்ரோவில் பயணித்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி 47.40 லட்சம் மக்கள் பயணித்துள்ளனர்.