இலங்கை மாணவர் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்: பிரித்தானிய இளைஞர் ஒப்புதல் வாக்குமூலம்

பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் பகுதியில் பொலிஸாரால் பின்தொடர்ந்து வந்த கார் மோதியதாலையே இலங்கையரான மாணவர் மரணமடைந்ததாக தொடர்புடைய ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

சம்பவயிடத்திலேயே மரணம்

நாட்டிங்ஹாமின் Trent பல்கலைக்கழக மாணவரான 31 வயது Oshada Jayasundera என்பவர் கடந்த டிசம்பர் 13ம் திகதி Huntingdon தெருவில் வாகனம் மோதி, சம்பவயிடத்திலேயே மரணமடைந்தார்.

இந்த விவகாரத்தில் Joshua Gregory என்பவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியதாலையே விபத்து ஏற்பட்டதாகவும், அது இலங்கையரான மாணவர் இறப்புக்கு காரணமாக அமைந்தது என்றும் கூறப்படுகிறது.

இதனால் குறித்த நபருக்கு பல ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது. 27 வயதான Joshua Gregory-க்கு இந்த வழக்கில் எதிர்வரும் மார்ச் 28ம் திகதி தீர்ப்பளிக்கப்படுகிறது.

நீண்ட காலமாக உளவியல் பாதிப்பு

இந்த நிலையில், Oshada Jayasundera-வின் சகோதரர் இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு வர இருப்பதாகவும், தீர்ப்பளிக்கப்படும் நாளும் பாதிக்கப்பட்டவர் சார்பாக தனிப்பட்ட அறிக்கை அளிக்க இருப்பதாகவும் சட்டத்தரணி ரிச்சர்ட் தாட்சர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தண்டனையை எதிர்கொள்ளும் ஜோசுவா கிரிகோரி நீண்ட காலமாக உளவியல் பாதிப்பை எதிர்கொண்டு வருபவர் என அவரது தரப்பு சட்டத்தரணி வாதிட்டுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *