இலவச மின்சாரம்.. மீண்டும் உயர்கிறது கரண்ட் பில்.. வீடு, வர்த்தக நிறுவனத்தின் மின் கட்டணம் உயர்கிறது

தொடர்ந்து 5 வருடங்களாகவே, புதுச்சேரியில் மின்கட்டணம் உயர்ந்துவரும்நிலையில், இன்னொரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

புதுச்சேரிரயில் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தப்படும் என்று கடந்த 2022 பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்த நிலையில், ரூ.251 கோடியில் மத்திய அரசுக்கு திட்ட அறிக்கையும் சமர்பிக்கப்பட்டிருந்தது. இதற்கு மத்திய அரசு அனுமதியும் தந்திருந்தது. ஆனால், இந்த திட்டத்துக்குகடும் எதிர்ப்பு கிளம்பியது.

செல்போன் போலவே, முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் இந்த முறையால், ஏழைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. ஆனாலும், மாநில அரசு கேட்கவில்லை.. ஆளுநர் தமிழிசையும் இதற்கு ஒப்புதல் தந்தார்.

மின்துறை: பிஎப்சி கன்சல்டிங் நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்த நிலையில், 10 நாட்களுக்கு முன்பு, ப்ரீபெய்ட் மின் மீட்டரை பொருத்த பிஎப்சிசிஎல் நிறுவனத்துக்கு அனுமதியை மின்துறை தந்துள்ளது. இதற்காக ரூ. 393 கோடிக்கு அனுமதி தரப்பட்டது.. அதாவது, ரூ.393 கோடியில் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக, இந்த அனுமதியை புதுச்சேரி அரசு தந்திருக்கிறது.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் வீடு, வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. இதன்மூலம் வீடுகளுக்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 75 காசுகள் வரை அதிகரிக்கும் என்பதால், புதுச்சேரி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வரவுசெலவு: மின்துறையின் வரவு செலவு கணக்குகள் கோவாவில் உள்ள இணை ஒழுங்கு முறை ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டு அதற்கேற்ப ஆண்டுதோறும் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி 2023-24 நிதியாண்டுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பிக்க, ஆளுநரும் ஒப்புதல் தந்திருந்தார்.. பிறகு, மின் கட்டண உயர்வு தொடர்பாக இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் புதுச்சேரி மின்துறை விண்ணப்பித்துள்ளது.

அதன்படி, வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு 50 காசு முதல் 75 காசு வரை உயர்த்த அனுமதி கேட்கப்பட்டிருக்கிறதாம்..

மின்கட்டணம்: அந்தவகையில், குறைந்த மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை யூனிட்டுக்கு ரூ. 6.35ல் இருந்து ரூ. 7 ஆக உயர்த்தவும், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கு கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5.45ல் இருந்து ரூ. 6 ஆக உயர்த்தவும், அதி உயர் மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கு யூனிட்டுக்கு ரூ.5.50ல் இருந்து ரூ.6 ஆகவும் உயர்த்தவும் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பம் தொடர்பாக ஆய்வு செய்ய இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் விரைவில் புதுச்சேரி வருவதாகவும், அம்மாநில மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அதற்குபிறகு, மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. இறுதியில், புதிய மின்கட்டணம் உயர்வு வரும் ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வரப்போகிறாம். கடந்த 5 வருடங்களாகவே, தொடர்ந்து மின்கட்டணம் உயர்ந்து வருவதால், புதுச்சேரி மக்கள் நிலைகுலைந்து போயுள்ளனராம்.

இலவச மின்சாரம்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மின்துறை தனியார்மயமானால் விவசாயத்துக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்தனர்.. ஆனால், அரசு தரப்பில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடரும் என உறுதி தரப்பட்டது.. அதுமாதிரியே, ப்ரீபெயிட் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தையும், மின்கட்டண உயர்வையும் அரசு பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *