ஒரே ஒரு கருப்பு நிற காரை 12கோடி ரூபா கொடுத்து வாங்கிய நடிகர்.. இவ்ளோ ரூபாயை கொட்டியதற்கு காரணம் இதுதானா!!

ஒரே ஒரு கருப்பு நிற காரை 12கோடி ரூபா கொடுத்து வாங்கிய நடிகர்.. இவ்ளோ ரூபாயை கொட்டியதற்கு காரணம் இதுதானா!!

இந்தியாவைச் சேர்ந்த முன்னணி நடிகர் ஒருவர் 12கோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்து ஒரே ஒரு காரை வாங்கியிருக்கும் சம்பவம் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த காரை வாங்கியதனால் இந்தியாவின் காஸ்ட்லியான கார் பயன்பாட்டாளர் எனும் புகழுக்குரியவராக அந்த நடிகர் மாறி இருக்கின்றார். யார் அந்த நடிகர் அந்த ஆடம்பர காரின் சிறப்புகள் என்ன என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களில் ஒருவர் இம்ரான் ஹஷ்மி. இவரே இந்தியாவின் மிக மிக விலை உயர்ந்த சொகுசு கார் மாடலை வாங்கியவர் ஆவார். அவர் வாங்கி இருப்பது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் பிளாக் பேட்ஜ் (Rolls Royce Ghost Black Badge) ஆகும்.

இதன் மும்பை ஆன்-ரோடு விலை ரூ. 12.25 கோடி ஆகும். இத்தகைய மிக மிக விலை உயர்ந்த சொகுசு காரையே இந்தி நடிகர் வாங்கி இருக்கின்றார். இது ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. இது ஓர் இரண்டாம் தலைமுறை வெர்ஷன் ஆகும்.

இந்த ஒற்றை கார் மாடலுக்கு 44 ஆயிரத்திற்கும் அதிகமான நிற தேர்வை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வழங்கிக் கொண்டிருக்கின்றது. இருப்பினும், இந்தி திரைப்பட நடிகர் இம்ரான் ஹஷ்மி கருப்பு நிறத்தையே தேர்வுச் செய்திருக்கின்றார். வழக்கமான கார்களில் பயன்படுத்தப்படும் பெயிண்டைவிட அதிக சிறப்பு வாய்ந்த கருப்பு நிற பூச்சே இதுவாகும்.\

இப்போது விற்பனையில் இருக்கும் புதிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார், முதல் முறையாக இந்த கார் விற்பனக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் சுமார் 11 ஆண்டுகள் கழித்து விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டதாகும். தொழிலதிபர்கள் மற்றும் சொகுசு கார் விரும்பிகள் மத்தியில் மிக அமோகமான வரவேற்பை இந்த கார் பெற்று வந்ததன் காரணத்தினால், அதில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் அப்படியே அது விற்பனைக்கு வழங்கியது.

காரின் உருவாக்கத்தில் இலகு ரக எடைக்கொண்ட அலுமினியமே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மாதிரியான கட்டுமான யுக்தியே சமீபத்திய பேந்தம் சொகுசு கார் மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மிகப் பெரிய இட வசதியை வழங்கும் சொகுசு கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது.

உதாரணமாக இதன் பூட்-ஸ்பேஸை கூறலாம். சுமார் 507 லிட்டர் கொள்ளளவு வசதிக் கொண்டதே இதன் பூட் ஆகும். இந்த பெரிய பூட் ஸ்பேஸ் மற்றும் இட வசதிக்கு அதன் பிரமாண்ட தோற்றமே காரணமாக உள்ளது. புதிய அதிக லக்சூரியான ரைடு அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

அந்தவகையில், சஸ்பென்ஷனை பொருத்தும் இடம் மாற்றப்பட்டு இருக்கின்றது. மற்றும் ஆக்ஸில்களுக்கு முன்னால் எஞ்ஜின் இருக்கும்படி மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. காரின் எடையானது அனைத்து மூலைகளிலும் சமமாக இருக்க வேண்டி இத்தகைய மாற்றம் கோஸ்ட் காரில் செய்யப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, இந்த கார் கவர்ச்சியான தோற்றத்திற்கும் சற்றும் குறைச்சல் இல்லாத காராக காட்சியளிக்கின்றது.

இதற்கு சான்றாக காரின் முகப்பு பகுதி இருக்கின்றது. மெல்லிய இவை போன்ற ஹெட்லேம்ப் லேசர் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதனால் 600 மீட்டர் தூரம் வரை வெளிச்சத்தை பிரதிபலிக்க முடியும். இத்துடன், சி வடிவ பகல்நேர லைட்டும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

மேலும், பெரிய ஏர் இன்டேக், பெரிய அலாய் வீல்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. எஞ்சினை பொருத்த வரை 6.75 லிட்டர் வி12 மோட்டாரே புதிய கோஸ்ட் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. முந்தைய வெர்ஷனில் 6.6 லிட்டர் வி12 பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதே எஞ்சினே பேந்தம் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 571 எச்பி-யையும், 850 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். காரின் ஒட்டுமொத்த எடை 2.5 டன் ஆகும். இருப்பினும் இதன் ஸ்பீடு பயங்கரமாக இருக்கும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 205 கிமீ ஆகும்.

மேலும், 4.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும். இதேபோல், பாதுகாப்பு வசதிகளிலும் இந்த கார் நம்மை மிரள செய்யும் வகையிலேயே இருக்கின்றது. குறிப்பாக, காரின் உள்ளே அமர்ந்து பயணிக்கும்போது கப்பலில் மிதப்பதைப் போன்ற அனுபவம் கிடைக்கும். மேலும், வெளிப்புறத்தில் கேட்கும் இரைச்சல்கள் துளிகூட காரின் உட்பகுதியில் கேட்காது. இத்தகைய தரமான வசதிகள் கொண்டதே ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ஆகும்.

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *