7.40% வரை வட்டி; எஸ்பிஐ பசுமை டெபாசிட் அறிமுகம்
SBI Green Rupee Term Deposit |sbi-fixed-deposit | ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பசுமை ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனம். ஜனவரி 12 வெள்ளிக்கிழமை, எஸ்.பி.ஐ பசுமை ரூபாய் கால வைப்புத்தொகையை (SGRTD) அறிமுகப்படுத்தியது.
இது சுற்றுச்சூழலுக்கு உகந்த முயற்சிகள் மற்றும் திட்டங்களுக்கு நிதி திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பசுமை நிதிச் சூழல் அமைப்பின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது’ எனத் தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ புதிய ஃபிக்ஸட் டெபாசிட்
இந்த வைப்புத் திட்டத்தில் குடியுரிமை பெற்ற தனிநபர்கள், தனிநபர்கள் அல்லாதவர்கள் மற்றும் குடியுரிமை இல்லாத இந்திய (NRI) வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இந்தப் ஃபிக்ஸட் டெபாசிட் 1,111 நாட்கள், 1777 நாட்கள் மற்றும் 2222 நாட்கள் ஆகிய மூன்று தவணைகளில் இருந்து தேர்ந்தெடுக்கும் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.
சூரிய மின் திட்டங்கள் மற்றும் காற்றாலைகளுக்கு நிதியளிப்பது முதல் கரிம வேளாண்மை மற்றும் ஆற்றல்-திறனுள்ள உள்கட்டமைப்பை ஆதரிப்பது வரை பசுமையான நிலையான வைப்புத்தொகை மூலம் நிதியளிக்கப்படும்.
(தகவல் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா)
கடன் வசதி
மேலும், இந்தப் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு எதிராக கடன்/ஓவர் டிராஃப்ட் வசதி உள்ளது.