முருகனுக்கு படிப்பாயசம் நிவேதனம் செய்யும் கோயில் தெரியுமா?

தென்காசிக்கு அருகில் ஆய்க்குடி எனும் தலத்தில் அமைந்துள்ளது அருள்மிக பாலசுப்பிரமணி சுவாமி திருக்கோயில்.

ஒரு காலத்தில் பொதிகைமலைக்கு அருகில் இருந்த மலைக்குன்றம் எனும் பகுதியை ஆய் எனும்அரசன் ஆண்ட வந்தான். அதனால் இப்பகுதி ஆய்க்குடி எனப்பட்டது. இங்கு மல்லிபுரம எனும் இடத்தில் இருந்த ஒரு குளத்தை தூர் வாரும்பொழுது ஒரு பெட்டியில் முருகன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

அதை எடுத்துச் சென்ற மல்லன் என்பவர் தனது வீட்டு ஆட்டுத் தொழுவத்தில் வைத்து வழிபட்டு வந்தார். ஒரு நாள் அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், அரசும் வேம்பும் அமைந்த இடத்தில் தம்மை பிரதிஷ்டை செய்து வழிபடும்படியும், அதற்கான இடத்தை தொழுத்தில் இருக்கும் ஒரு ஆடே வழிகாட்டும் என்றும் கூறினார்.

அதன்படியே ஒரு ஆடு வழிகாட்ட அரசும் வேம்பும் இணைந்து செழித்திருந்த ஒரு இடத்தில் அந்த முருகப்பெருமான் சிலையை பிரதிஷ்டை செய்து, அங்கு சிறிதாக ஒரு குடிசையும் எழுப்பி வழிபாட்டுக்குரியதாக்கினார். பிற்காலத்தில் பல்வேறு காலகட்டங்களில் பலராலும் இக்கோயில் மேம்படுத்தப்பட்டது. இக்கோயிலில் முருகப்பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களுடனும் அருள்பாலிக்கிறார்.

மதுரையில் வாழ்ந்த பட்டு வணிகர் ஒருவர் குழந்தை வரம் வேண்டி பல கோயில்களுக்குச் சென்று, இறுதியாக ஆய்க்குடி முருகன் கோயிலுக்கு வந்து, தமக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தால் முருகப்பெருமானுக்கு வைர வேல் சாத்துவதாக வேண்டிக்கொண்டார். அவரது வேண்டுதல் பலித்து அந்த பட்டு வணிகருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது. ஆனால், அந்த வணிகர் தனது வேண்டுதலை மற்ந்து போனார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *