7777 நம்பர் பிளேட்டை அதிக காசு கொடுத்து வாங்கிய கேரள தொழிலதிபர்.. இந்த நம்பர் பிளேட் இவ்ளோ காஸ்ட்லீயானதா!!..
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் தொழிலதபர் தன்னுடைய விலை உயர்ந்த காரை விலை உயர்ந்த நம்பர் பிளேட்டால் அலங்கரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 7777 எனும் நம்பர் பிளேட்டைக் கொண்டே தன்னுடைய புத்தம் புதிய சொகுசு காரை அவர் அலங்கரித்து இருக்கின்றார்.
இதை அவர் எவ்வளவு ரூபாய்க்கு ஏலத்தில் இருந்து பெற்றார்? இந்த நம்பர் பிளேட்டை அவர் பொருத்தி இருக்கும் கார் மாடலின் விலை மற்றும் அதன் சிறப்புகள் என்ன என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
வாகன உலகம் சார்ந்த சுவாரஷ்யமான தகவல்களை நம்முடைய வாசகர்களுக்கு வழங்குவதில் நம்முடைய டிரைவ்ஸ்பார்க் தளம் ஒருபோதும் தயங்கியது இல்லை. அந்தவகையில், கேரள மாநிலத்தில் அரங்கேறி இருக்கும் ஓர் வாகனம் சார்ந்த விநோத சம்பவம் பற்றிய தகவலையே இந்த பதிவில் உங்களுக்காக விரிவாக தொகுத்து வழங்கி இருக்கின்றோம்.
அதாவது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய விலை உயர்ந்த ஆடம்பர காரை அலங்கரிக்க, மிக மிக விலை உயர்ந்த நம்பர் பிளேட்டை பயன்படுத்தி இருக்கின்றார். ‘கேஎல் 07 டிசி 7777’ (KL 07 DC 7777) எனும் ஃபேன்சி நம்பர் பிளேட்டைக் கொண்டே அவர் அவருடைய தன்னுடைய புதிய லக்சூரி காரை அலங்கரித்துள்ளார்.
இந்த நம்பர் பிளேட் பயன்படுத்தி இருக்கும் கார் மாடலானது பிஎம்டபிள்யூவின் தயாரிப்பான ஐ7 (BMW i7) ஆகும். இந்த ஆடம்பர கார் மாடலின் விலையே 2 கோடி ரூபாய்க்கும் அதிகம் ஆகும். இந்தியாவில் இந்த கார் மாடலின் ஆரம்ப விலையே ரூ. 2.03 கோடிகள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
மேலும், 2.50 கோடி ரூபாய் வரையிலான விலையில் இது விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். பிஎம்டபிள்யூ ஐ7 ஓர் அதிக சொகுசு வசதிகள் நிறைந்த செடான் ரக கார் ஆகும். இந்த காரை சிறப்பிக்கவே அவர் ஏலத்தில் பங்கேற்று கேஎல் 07 டிசி 7777 நம்பர் பிளேட்டை வாங்கி பொருத்தி இருக்கின்றார்.
இந்த நம்பர் பிளேட்டின் விலை நம்ம டாடா பஞ்ச் காரின் விலையைவிட மிக மிக அதிகம் ஆகும். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக மாறி இருக்கும் டாடா பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி ரூ. 6 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.
ஆனால், பிஎம்டபிள்யூ ஐ7 சொகுசு காரில் பயன்படுத்தி இருக்கும் நம்பர் பிளேட் விலையோ இதைவிட 1.7 லட்சம் ரூபாய் அதிகம் விலைக் கொண்டதாக இருக்கின்றது. ஆமாங்க, இந்த நம்பர் பிளேட்டின் மதிப்பு ரூ. 7.7 லட்சம் ஆகும். இதையே கேரளாவைச் சேர்ந்த ராஜ் எனும் தொழிலதிபர் ஏலத்தில் இருந்து வாங்கி இருக்கின்றார்.
எர்னாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இந்த தொழிலதிபர் ஆவார். ஃபேர்ஃப்யூச்சர் வெளிநாட்டுக் கல்வி ஆலோசனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இவரே ஆவார். இவரிடத்தில் ஏற்கனவே ஏழு சொகுசு கார் மாடல்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையிலேயே கூடுதலாக பிஎம்டபிள்யூ ஐ7 காரை வாங்கி இருக்கின்றார்.
இது ஓர் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக மிக விலை உயர்ந்த மின்சார கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 591 கிமீ முதல் 625 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும்.
இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 101.7 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் காரை ஏசி மற்றும் டிசி என இரண்டு விதமான சார்ஜிங் பாயிண்டிலும் வைத்து சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். மேலும், அதிக வேகத்தில் சார்ஜ் செய்துக் கொள்ளும் வசதியும் இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
உதாரணமாக 195 kW டிசி சார்ஜர் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்பட்சத்தில் 10 சதவீதம் முதல் 80 சதவீத சார்ஜை வெறும் 34 நிமிடங்களிலேயே சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். இந்த மாதிரியான விஷயத்தில் மட்டுமே இந்த கார் சிறப்பு வாய்ந்தது இல்லைங்க.
தொழில்நுட்ப விஷயத்திலும் தலை சிறந்த கார் மாடலாக ஐ7 காட்சியளிக்கின்றது. அந்தவகையில், மிகப் பெரிய வளைவான இன்ஃபோடெயின்மென்ட் திரை வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், பயணிகளின் பொழுதுபோக்கிற்காக 8கே திறன் வாய்ந்த 31.3 அங்குல சினிமாவிற்கு இணையான திரை ஒன்றும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும்.
இதுதவிர, 5.5 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் கன்ட்ரோல், க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் அதிக சொகுசான ரைடு அனுபவத்தை வழங்கும் இருக்கைகளே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, மல்டி ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், லெதர் இருக்கைகள், பன்முக க்ளைமேட் கன்ட்ரோல், லெதர் இருக்கை, எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் இருக்கை ஞாபக திறன் மற்றும் மசாஜ் வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுமாதிரியான ஏகப்பட்ட சிறப்பு வசதிகளை தனக்குள் தாராளமாக இந்த கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்திய தொழிலதிபர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் மத்தியில் இந்த காருக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், நடிகைகள் ரேகா, ஜக்குலின் ஃபெர்னான்டஸ், கிம் ஷர்மா உள்ளிட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல், சேகர் சுமன், அஜய் தேவ்கன் உள்ளிட்டோரும் பிஎம்டபிள்யூ ஐ7 சொகுசு எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தி வருகின்றனர்.