பொங்கலைக் கொண்டாட 4.34 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்… !

நாளை தமிழர் பண்டிகையாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் பெருநகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம் அந்த வகையில் நடப்பாண்இல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இதுவரை 7,474 பேருந்துகளில் 4.34 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் செய்துள்ளனர்.

 

இதற்காக ஏற்கனவே 2.30 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் 2210 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் ஒரே நாளில் இயக்கப்பட்ட அதிகபட்ச சிறப்பு பேருந்துகள் இவை என போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஒரேநாளில் 2.17 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அதே போல் இன்று பயணம் செய்ய இதுவரை 1,96,310 பேர் சிறப்பு பேருந்துகளில் செல்ல முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

19,484 பொங்கல் சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு அரசு சார்பில் இயக்கப்பட உள்ளதாகவும், இந்த பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். இதில் சென்னையில் இருந்து மட்டும் 11,006 சிறப்பு பேருந்துகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மாவட்ட பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாகத்தில் இருந்தே புறப்படும். கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு, தாம்பரம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் முன்பதிவு மையங்கள் செயல்படும் . பொதுமக்கள் இந்த முன்பதிவு மையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பொங்கலுக்கான சிறப்பு பேருந்துகள் இன்று ஜனவரி 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *