`மண்ணிலே கண்டெடுத்த மாணிக்கம்!’ சுசீந்திரம் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு சோடஷ அபிஷேகம்!

ன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற திருத்தலம் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில். அத்திரி முனிவர் தனது பத்தினி அனுஷியா தேவியுடன் தவமியற்றிய திருத்தலம்.

அனுஷியா தேவியின் கற்பின் பெருமையை நிலைநாட்ட சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளும் முனிவர்கள் வடிவில் அத்திரி மஹரிஷியின் ஆசிரமம் சென்று பிச்சை கேட்டனர். ஆசிரமத்தில் இருந்த அனுஷியா தேவி பிச்சை அளிக்க முன்வந்தார். அப்போது, பிறந்த மேனியுடன் உணவு அளித்தால்தான் சாப்பிடுவோம் என மும்மூர்த்திகளும் கூறினர். தனது கற்பின் சக்தியால் மும்மூர்த்திகளையும் சிறு குழந்தையாக மாற்றி அவர்கள் விருப்பப்படி அமுதளித்தார் அனுஷியாதேவி. பின்னர் முப்பெரும் தேவியரும் வேண்ட மும்மூர்த்திகளுக்கும் பழைய வடிவத்தை வழங்கினார் அனுஷியா தேவி.

இந்தத் திருவிளையாடல் நடந்த திருத்தலம் சுசீந்திரம். இந்திரன் சாபவிமோசனம் பெற்ற திருத்தலம். பல சிறப்புகளைக்கொண்ட சுசீந்திரம் கோயிலில் வடக்குப் பிராகாரத்தில் அமைந்துள்ள ராமர் சந்நிதிக்கு எதிரே வட கிழக்கு மூலையில் 18 அடி உயர ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

18 அடி உயர சுசீந்திரம் ஆஞ்சநேயர்படையெடுப்பில் இருந்து காப்பாற்ற ஆஞ்சநேயரை மண்ணுக்குள் புதைத்துவைத்த வரலாறு சுசீந்திரத்தில் நடந்துள்ளது.

1740-ம் ஆண்டு ஜனவரி மாதம் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா மகாராஜாவின் படை வீரர்களின் ஒரு பிரிவினர் குளச்சலில் டச்சுப் போர் வீரர்களுடனும், மற்றொரு பிரிவினர் வடக்கே காயங்குளம் மன்னரிடமும் போரிட்டு கொண்டிருந்தனர். அப்போது பார்த்து ஆற்காடு நவாப் பான சந்தாசாகிப் அவரது சகோதரர் போடாசாகிப் மற்றும் படைத்தளபதி சப்தர் அலிகான் ஆகியோர் நாஞ்சில் நாட்டை நோக்கிப் படையெடுத்து வந்தனர்.

ஆரல்வாய்மொழிக் கோட்டையைக் கடந்து அஞ்சுகிராமம் வழியாக வரும்போது அவர்கள் அறுவடைக்காகக் காத்து நின்ற நெற்பயிர்களையும், தானியங்களையும் சூறையாடிவிட்டு ஈத்தங்காடு பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு, அன்றைய வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் தலைமையில் ஊர் பொதுமக்கள் சேர்ந்து கடும் சமர் நடத்தினர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *