பழையன கழிதலும் புதியன புகுத்தலும்… இன்று போகி திருநாள்… இதையெல்லாம் செய்யவே செய்யாதீங்க!
உலகம் முழுவதும் இன்று போகி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் சுத்தமான நகரங்கள் குறித்த கணக்கெடுப்பில் முதல் 100 நகரங்களில் ஒரு நகரம் கூட தமிழகத்தைச் சேர்ந்த நகரங்கள் தேர்வாகவில்லை.
தமிழகத்தில் சென்னைக்கு 144வது இடம் தான் கிடைத்திருக்கிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் எனும் பழமொழியை போகி திருநாளுக்கு மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கும் கொண்டு வாங்க. மனசில் உள்ள பழைய வன்மத்தைக் கழித்து விட்டு, புதிய மனிதராய் மனதளவில் பிறப்பெடுப்போம்.
இந்த நாளிலே பொதுமக்கள் வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். மனதில் இருக்கும் தீய எண்ணங்கள், பழைய மூடநம்பிக்கைகளை தீயிட்டு கொளுத்தி புதுவாழ்வில் புக வேண்டும் என்பது தான் இதன் தாத்பர்யம். ஆனால் இதை கண்டு கொள்வதே இல்லை.
நாளை ஜனவரி 15ம் தேதி தை மகள் பிறக்கிறாள். தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு பொங்கல் சிறப்பு தொகுப்பை வழங்கியுள்ளது. இதில் பச்சரிசி, கரும்பு, சர்க்கரையுடன் ரூ1000 பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இன்று கொண்டாடப்படும் போகி திருநாளை. புகையில்லா போகி பண்டிகை கொண்டாட பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.