பொங்கல் வைக்க நல்ல நேரம் இது தான்..!
ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாளும் முக்கிய நாளாக கருதி கொண்டாடுவது தமிழர்களின் மரபு. காலப்போக்கில் இந்த வழக்கம் மறைந்து தற்போது சித்திரை, ஆடி, கார்த்திகை, தை உள்ளிட்ட மாதங்களின் முதல் நாள் முக்கிய விழா நாளாகவும், விரத நாளாகவும் கொண்டாடுகிறோம்.
இவற்றுள் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாகவும், தை முதல் நாளை பொங்கல் பண்டிகையாகவும் கொண்டாடுகிறோம்.
தமிழர்களின் மிக முக்கியமான பாரம்பரிய பண்டிகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள். குளிர்காலம் முடிந்து, வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும், உழவுக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் சூரியன், மாடு உள்ளிட்டவற்றிற்கு நன்றி செலுத்தி, வழிபடும் பண்டிகையாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
போகி துவங்கி, காணும் பொங்கல் வரை நான்கு நாள் கொண்டாட்டமாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. புதிய பானையில், புதிய அரிசியில் பொங்கி வரும் பொங்கலை போல் நம்முடைய வாழ்விலும் ஆனந்தமும், செல்வ வளமும் நிறைந்து பொங்கி வர வேண்டும் என்ற நோக்கத்துடனேயே பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் ஆண்டு முழுவதும் வாழ்வு செழிக்கும் என்பது நம்பிக்கை.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை திங்கட்கிழமை வருகிறது. அதோடு அன்றைய தினம் கரிநாளும் கூட. அன்றைய தினம் காலை 07.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலமும், 10.30 முதல் 12 வரை எமகண்டமும் உள்ளது. இதனால் இந்த நேரங்களை தவிர்த்து பொங்கல் வைக்கலாம்.
ஜனவரி 15 பொங்கல் வைக்க நல்ல நேரம் :
காலை 06.30 முதல் 07.30 வரை
அல்லது
காலை 09.30 முதல் 10.30 வரை
ஜனவரி 16 மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம் :
காலை 11 மணி முதல் பகல் 01 மணி வரை