அதே பாரம்பரியம்; அதே சுவை… வீட்டு வாசலில் சர்க்கரைப் பொங்கல் வைப்பது எப்படி?

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகை திருநாளில் முக்கியமானது பொங்கல் பண்டிகை. இந்த நாளில் அறுவடை செய்த புதிய அரிசியில் பொங்கல் வைத்து சூரியன், கால்நடை ஆகியவற்றிக்கு படைப்பது தமிழர்கன் பண்பாடு. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கலின் முதல் நாளில் மக்கள் இந்திரனை (மழையின் கடவுள்) வணங்குகிறார்கள்.

அதேபோல் பொங்கல் தினத்தில் விதவிதமாக பொங்கல் செய்து சூரிய பகவானுக்கு படைப்பாளார்கள். கடந்த காலங்களில் விறகு அடுப்பில் பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து வந்த நிலையில், இன்றைய காலக்கட்டத்தில் குக்கர், கேஸ்டவ் என டெக்னாலஜி வளர்ந்துவிட்டது என்பதால், அடுப்பு விறகு என பாரம்பரியத்தை யாரும் பயன்படுத்துவதில்லை.

அதே சமயம் கிராமங்களில் இன்றும் விறகு அடுப்பில் சமைக்கும் பழக்கம் பெரும்பாலான மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக புதிதாக வீடு கட்டியவர்கள் தங்கள் வீடுகளில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில், பாரம்பரிய முறையில் விறகு அடுப்பில் பொங்கல் செய்வது.

செய்முறை

முதலில் அடுப்பை எடுத்துக்கொண்டு, நனறாக கழுவி மஞ்சள் பொட்டு வைத்துவிட்டு, அதேபோல் பொங்கல் வைக்கும் பாத்திரத்தையும் நன்றாக கழுவி, பாத்திரத்தின் மேல் மஞ்சள் கயிறு கட்டி, மஞ்சள் பொட்டு வைக்க வேண்டும். அதன்பிறகு பச்சரிசையை எழுத்து நன்றாக கழுவி ஊறவைக்க வேண்டும். அரிசி கடைசியாக கழுவிய தண்ணீரை பொங்கல் பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். அரிசி கழுவிய தண்ணீரில் பொங்கல் வைக்கும்போது பொங்கல் நன்றாக பொங்கி வரும்.

அரிசி கழுவிய தண்ணீரை பொங்கல் பாத்திரத்தில் ஏற்றி அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைக்கவும். அடுப்பின் மையப்பகுதியில் கற்பூரம் வைத்து பற்ற வைப்பதே பாரம்பரிய முறையாகும். கற்பூரத்தை பற்ற வைத்து அதில், சிறிய விறகை முதலில் வைத்து தீ நன்றாக கொழுந்துவிட்டு எரிய செய்ய வேண்டும். அதன்பிறகு பெரிய விறகை கைத்து எரிக்கலாம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *