பால் பொங்கல், பல காய் சாம்பார்… தைப் பொங்கலை இப்படி அசத்துங்க!
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகை திருநாளில் முக்கியமானது பொங்கல் பண்டிகை. இந்த நாளில் அறுவடை செய்த புதிய அரிசியில் பொங்கல் வைத்து சூரியன், கால்நடை ஆகியவற்றிக்கு படைப்பது தமிழர்கன் பண்பாடு. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கலின் முதல் நாளில் மக்கள் இந்திரனை (மழையின் கடவுள்) வணங்குகிறார்கள்.
திருவிழாவின் இரண்டாவது நாளில், சூரிய பகவானை வழிபடுவது நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது. பொங்கலின் மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது, இது கால்நடைகளுக்கு சிறப்பிக்கப்படுகிறது. நான்காவது நாள் ‘காணும் பொங்கல்’, இதில் மக்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியான தருணங்களை பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள்.
அதேபோல் பொங்கல் தினத்தில் விதவிதமாக பொங்கல் செய்து சூரிய பகவானுக்கு படைப்பாளார்கள். அந்த வகையில் பால் பொங்கலும் பலகாய் குழம்பும் செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்
பால் பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்
பால் – 1 கப்
பச்சரிசி – 1 கப்
தண்ணீர் – 6 கப்
நெய் – ஒரு டீஸ்பூன்
பால் பொங்கல் செய்முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில், ஒரு கப் பால் மற்றும் 6 கப் தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பால் நன்றாக கொத்தித்தவுடன், நன்றாக கழுவிய பச்ச அரிசியை அதில் சேர்த்து, ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து அரிசி நன்றாக கொழைந்து வரும் வரை வேக வைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்தவிட்டு, பொங்கல் அடி பிடித்துவிடாமல் இருக்க இவ்வப்போது கரண்டியை வைத்து கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான பால் பொங்கல் தயார்.