IND vs AFG – டி20 அணியில் ஜடேஜா இடத்திற்கு ஆபத்து.. பவுலிங்கில் சக்கை போடு போட்ட 29 வயது வீரர்
இந்தூர் : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து களமிறங்கி உள்ளது. வரும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பு கடைசி போட்டி இந்தியா பங்கேற்பது இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் டி20 உலக கோப்பைக்கு எந்த சுழற் பந்துவீச்சாளர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்காக இந்திய அணி வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், ரவி பிஷ்ணாய் என்ற மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் ஜடேஜா இந்த தொடரில் களமிறங்கவில்லை ஜடேஜாவுக்கு தான் டி20 உலக கோப்பையில் முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜடேஜாவின் இடத்திற்கே ஆப்பு வைக்கும் வகையில் 29 வயதான அக்சர் பட்டேல் இருக்கிறார். கடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் போது அக்சர் பட்டேல் அணியில் இருந்திருக்க வேண்டும்.