IPL 2024 : பயிற்சியாளராக வாய்ப்பு கேட்ட யுவராஜ் சிங்.. நண்பர் என்றும் பார்க்காமல் சொன்ன பதில்
மும்பை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தற்போது ஓய்வு பெற்று இருக்கும் நிலையில் வேறு எந்த கிரிக்கெட் சார்ந்த பணிகளிலும் அவர் ஈடுபடவில்லை. அது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பிய போது தனக்கு ஏற்பட்ட சம்பவம் ஒன்றை கூறினார்.
குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஆஷிஷ் நெஹ்ரா, யுவராஜ் சிங்குடன் ஒன்றாக விளையாடியவர். நண்பரும் கூட. நீண்ட காலமாக கிரிக்கெட்டை விட்டு விலகி இருக்கும் யுவராஜ் சிங், பயிற்சியாளராக விரும்பி, குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் ஒரு நபராக தன்னையும் சேர்த்துக் கொள்ளுமாறு அவரிடம் உதவி கேட்டு இருக்கிறார்.
ஆனால், ஆஷிஷ் நெஹ்ரா முடியாது என அவரிடம் முகத்தில் அடித்தாற் போல கூறி இருக்கிறார். குஜராத் டைட்டன்ஸ் அணி உருவான பின் அதன் முதல் சீசனியிலேயே ஐபிஎல் கோப்பை வென்றதால் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு அந்த அணியில் கூடுதல் செல்வாக்கு உள்ளது. அவர் நினைத்து இருந்தால் யுவராஜ் சிங்கை ஆலோசகராகவோ, பேட்டிங் அல்லது ஃபீல்டிங் பயிற்சியாளராகவோ சேர்த்துக் கொண்டு இருக்கலாம். ஆனால், அவர் மறுத்து இருக்கிறார்.