பூமிக்கடியில் விவசாயம்; குளிர், வெயில் இரண்டையும் சமாளிக்கலாம்; இது எங்கே தெரியுமா?
தென் அமெரிக்காவின் பொலிவியா நாடு மலைப்பகுதிகளை அதிகமாக கொண்டது. அடிக்கடி பனி, வெயில், மழை என அடித்து விவசாயத்தை கடுமையாக பாதித்துக்கொண்டிருந்தது.
1990-ல் அந்நாட்டுக்கு வந்த ஸ்விட்சர்லாந்து இன்ஜினீயர் பீட்டர் ஐஸிலி (Peter Iseli) என்பவர், விவசாயிகளின் பிரச்னையைக் கண்டதும் அவருக்கு பழைய ரோமானியர் கால தொழில்நுட்பம் ஒன்று நினைவுக்கு வந்தது. அதை பொலிவியா விவசாயிகளுக்கு கூறினார்.
வலிபினி அறைகளில் காய்கறி
விவசாயம்`அரசியலிலிருந்து என்னை விட்டுவிட்டால், தோட்டத்து பக்கம் விவசாயம் பார்க்க போய்விடுவேன்!’ – அண்ணாமலை
அதாவது, “பூமிக்கு அடியில் 10 அடி ஆழத்துக்கு குழி தோண்டுங்கள். ஒரு அறை மாதிரி அமையுங்கள். அதன் மூன்று பக்கமும் மண் அல்லது மண் சுவர்தான் இருக்கவேண்டும். ஒருபக்கம் மண் சுவருடன் கூடிய கதவை அமைக்க வேண்டும். இப்போது குழிக்கு மேற்புறத்தில் கண்ணாடியால் கூரை அமையுங்கள். அவ்வளவுதான். என்ன வெயில், பனி அடித்தாலும் அதன் வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை தாண்டாது. வெளியே கடும்பனி பெய்தாலும், மைனஸ் 30 டிகிரி குளிர் என்றாலும் இந்த அறைக்குள் 20 டிகிரி செல்ஸியஸ் வெப்பமே நிலவும்” என்று சொல்லியிருக்கிறார்.
இதற்கு பொலிவிய மொழியில் ‘வலிபினி’ (Walipini) என்ற பெயரையும் சூட்டினார்கள். தமிழில் ‘வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் கதகதப்பான இடம்’ என்று அழைக்கப்படும்.
பூமிக்கு அடியில் அறைகள் இருப்பதால் அங்கு வளரும் தாவரங்களுக்கு பெரிய அளவில் பூச்சித் தாக்குதலும் இல்லை. குறைவான வெப்பநிலையில் இருப்பதால் பாசன நீரும் குறைவாகவே தேவைப்படும். மேற்புத்தில் இருக்கும் கண்ணாடி மூலம் சூரிய வெளிச்சம் குளிர்காலத்திலும், பனிக்காலத்திலும் கிடைக்கும். வலிபினி அறைகள் பொதுவாக பூமிக்கு 10 முதல் 20 அடி ஆழத்தில் தோண்டப்படுகின்றன. இந்த ஆழத்தில், பூமியின் நிலப்பரப்பின் வெப்பநிலை பொதுவாக 15 முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இது காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற தாவரங்களை வளர்க்க ஏற்ற வெப்பநிலையாகும்.