4 நிமிடம் நீடித்த கிஸ்; இந்திய சினிமாவின் முதல் நீண்ட முத்த காட்சி!

இன்றைய காலக்கட்டத்தில் நடிகர்-நடிகைகள் நெருங்கி நடிக்க தயங்குவதில்லை. விஜய்- திரிஷா, தனுஷ்-ஸ்ருதிஹாசன், விஜய் தேவரகொண்டா-சமந்தா, விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தனா என இந்தப் பட்டியல் நீள்கிறது.

தீபிகா படுகோனே, ஆலியா பட், பிரியங்கா சோப்ரா, ஷாருக்கான், அமீர் கான், கரீனா கபூர் என பாலிவுட்டில் இந்தப் பட்டியல் நீள்கிறது.

ஆனால் அன்றைய காலக்கட்டங்கள் அவ்வாறு இல்லை. கதாநாயகி, கதாநாயகன் உடன் நெருங்கி நடிக்க அச்சப்படுவார்கள். அக்காலக்கட்டத்தில் ஒரு நடிகை நீண்ட நேர முத்தக்காட்சியில் நடித்துள்ளார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

அவர்தான் டிராகன் லேடி தேவிகா ராணி. 1933ஆம் ஆண்டு கர்மா என்ற படம் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் தேவிகா ராணியும், ஹிமான்ஷூ ராய்-யும் கதாநாயகி, கதாநாயகன் வேடத்தில் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் முத்தக் காட்சி ஒன்று 4 நிமிடங்கள் வரை நீடித்தது. இநதக் காட்சி வெளியானதும் பெரும் சர்ச்சைகள் வெடித்தன. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் தேவிகா ராணியும், ஹிமான்ஷூ ராய்-யம் நிஜத்தில் கணவன்-மனைவி ஆவார்கள்.

ஆகையால் இந்தக் காட்சியை படமாக்குவதில் இயக்குனருக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. ஆனால் திரையில் பகிரங்கமாக காட்டியது பெரும் சர்ச்சையானது.

தேவிகா ராணியின் பிம்பம் கடுமையாக சிதைக்கப்பட்டது. இது மட்டுமின்றி தேவிகா ராணிக்கு தனிப்பட்ட சில விருப்பங்களும் இருந்தன. அவர் புகை, மது பழக்கம் கொண்டவராக காணப்பட்டார்.

இதை மக்கள் மத்தியில் அவர் மறைக்கவில்லை. இதனால் இவரை டிராகன் லேடி என அழைத்தார்கள். பின்னாள்களில், அவரது கணவர் ஹிமான்ஷு ராயுடன் இணைந்து பாம்பே டாக்கீஸ் நிறுவனத்தையும் நிறுவினார். இந்த பேனரில் ‘ஜவானி கி ஹவா’ போன்ற ஹிட் படத்தை கொடுத்தனர்.

ஹிமான்ஷு ராய் 1940 இல் இறந்தார், அதன் பிறகு தேவிகா ராணி தனியாக பாம்பே டாக்கீஸை நடத்தினார். 1945 இல், அவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தினார்.

ரஷ்ய ஓவியர் ஸ்வெடோஸ்லாவ் ரோரிச்சை மணந்தார், மேலும் பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். அதன் பின்னர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் அவர் ஊடக வெளிச்சம் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தார்.

இவருக்கு 1958ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டில் திரைப்படங்களுக்கான நாட்டின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதை, முதன் முதலில் வென்றவர் என்ற பெருமையை பெற்றார்.

இவரின் இரண்டாவது கணவர் 1993ல் இறந்த நிலையில் ஓராண்டு கழித்து 1994ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூச்சுக்குழாயில் ஏற்பட்ட அழற்சி காரணமாக உயிரிழந்தார். இவரின் மரணத்துக்கு பின்னர் இவருக்க முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *