பாரம்பரிய முறைப்படி பொங்கல் தினத்தன்று செய்ய வேண்டிய ரெசிப்பி..

பொங்கல் பண்டிகை என்றாலே பழையன கழிதலும், புதியன புகுதலும் தானே… நம்முடைய பழைய பாரம்பரியத்தை மறக்க வேண்டாம்.

இன்னும் சில ஹெல்த்தியான ரெசிப்பிக்களை கற்றுக்கொள்வோம். நம்முடைய குடும்பத்தின் ஆரோக்கியத்தை காப்போம்…

சர்க்கரைப் பொங்கல் என்றால், சர்க்கரையைப் போட வேண்டும் என்று சிலர் எண்ணுவது எல்லாம் வேடிக்கை. பாரம்பரிய முறைப்படி பொங்கல் தினத்தன்று செய்ய வேண்டிய ரெசிப்பிக்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.

சர்க்கரைப் பொங்கல்… தேவையானவை: புது பச்சரிசி ஒரு கப், சிறு பருப்பு 2 டேபிள்ஸ்பூன், பால் 100 மி.லி, புது வெல்லம் 150 கிராம், முந்திரி, திராட்சை தலா 10 கிராம், நெய் 2 டீஸ்பூன், ஏலக்காய் தூள் சிறிதளவு. செய்முறை: இரண்டு கப் தண்ணீர், பால் இரண்டையும் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். பாசிப்பருப்பு அரை வேக்காடாகவும், பச்சரிசியை முக்கால் பதத்திலும் வேகவைக்கவும். வெல்லத்தை நன்றாகப் பொடித்து, வேகவைத்த பொங்கலில் சேர்த்துக் கிளறிவிடவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து, பொங்கலுடன் சேர்த்துக் கிண்டி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். குறிப்பு: இதில் அரை முடி தேங்காயைத் துருவி சேர்த்து கலக்கி பரிமாறினால் சுவை கூடுதலாக இருக்கும்.

மெது வடை… தேவையானவை: உளுந்து 500 கிராம், பச்சரிசி மாவு 100 கிராம், பச்சைமிளகாய் 2, பெரிய வெங்காயம் 2, கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு, மிளகு 10 கிராம், உப்பு, எண்ணெய் தேவையான அளவு. செய்முறை: உளுந்தை ஒரு மணிநேரம் ஊறவைத்து, கெட்டியாக அரைக்கவும். இதில் பச்சரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் , கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, மிளகு, உப்பு சேர்த்துப் பிசைந்து, வட்டமாகத் தட்டி, காயும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

பால் வெண் பொங்கல்… தேவையானவை: பச்சரிசி ஒரு கப், சிறுபருப்பு – 2 டேபிள்ஸ்பூன், பசும்பால் 100 மி.லி, உப்பு தேவையான அளவு. செய்முறை: இரண்டு கப் தண்ணீரில், பாசிப்பருப்பை அரைப் பதமாக வேகவைக்கவும். பின்பு, அரிசியை நன்றாக வேகவைத்து, அதில் பால் ஊற்றி, உப்பு சேர்த்த நன்கு கிளறி இறக்கவும். தேவை எனில், சிறிது நெய்யில், மிளவு, முந்திரியை வதக்கி சேர்க்கலாம். நல்ல வாசனையாக இருக்கும்.

காய்கறிக் கூட்டு தேவையானவை: பூசணிக்காய் ஒரு துண்டு, அவரைக்காய் 100 கிராம், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு தலா 2, வாழைக்காய் 1, மொச்சை கால் கிலோ, பச்சைமிளகாய் தேவைக்கு ஏற்ப, துவரம் பருப்பு கால் கிலோ, தேங்காய் அரை மூடி. தாளிக்க: கடுகு, சீரகம், உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் தேவையான அளவு. செய்முறை: காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *