டீடாக்ஸ் முதல் வெயிட் லாஸ் வரை… வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தாலே போதும்!
இருப்பினும், நன்றாக சாப்பிடுவது மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மட்டும் போதாது. மாறாக, இதனுடன் மேலும் பல விஷயங்களையும் கவனிக்க வேண்டும். குறிப்பிட்ட சில பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது ஆரோக்கியமாக இருக்க மிகவும் முக்கியம். காலையில் எழுந்தவுடன் வெந்நீர் குடிப்பதும் அப்படிப்பட்ட ஒரு பழக்கம். கோடைகாலமாக இருந்தாலும் சரி, குளிர்காலமாக இருந்தாலும் சரி, தினமும் காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால், ஆரோக்கியத்திற்கு பல சிறந்த நன்மைகள் கிடைக்கும் என்பது மிகச் சிலருக்குத் தெரியும் என்பது மிகவும் வருத்தமான விஷயம்.
தண்ணீரை அதிகம் சூடாக்கிய பிறகுதான் குடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை, வெதுவெதுப்பான நீரை உட்கொள்வதன் மூலமும் அதன் பலன்களைப் பெறலாம். இந்தக் கட்டுரையில், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
உடல் ஆரோக்கியமும் தண்ணீரும்
உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. மனித உடலில் உள்ள நீரின் அளவு 50-60 சதவீதம். நீர் உடலின் உறுப்புகள் மற்றும் திசுக்களைப் பாதுகாக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது, சிறந்த டீடாக்ஸ் பானமாக செயல்படுகிறது. உடல் உள் உறுப்புகள் சுத்தமடைந்து, உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும். இதன் மூலம்
சுறுசுறுப்பான உடலைப் பெறலாம்.
உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது
உடலில் சேரும் நச்சுக்களையும் அழுக்குகளையும் அகற்றுவது அவசியம். உடலில் இருந்து அழுக்குகள் வெளியேறுவது முற்றிலும் நின்றுவிட்டால், நாம் நோய்வாய்ப்பட ஆரம்பிக்கிறோம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதன் மூலம், உடலில் இருந்து அழுக்குகள் அல்லது நச்சுகள் தானாகவே வெளியேறி ஆரோக்கியமாக இருக்கும். வெறும் வயிற்றில் வெதுவெதுபான நீர் குடிப்பது உடலை செலவு ஏதும் இன்றி டீடாக்ஸ் செய்யும் மிகவும் பயனுள்ள வழியாக கருதப்படுகிறது.