வெறும் வயிற்றில் பப்பாளி தண்ணீர் குடிச்சு பாருங்க! ஆரோக்கியத்தை அள்ளித்தரும் டீடாக்ஸ் நீர்
காலை உணவு என்பது நாம் தூங்கி எழுந்த சில மணி நேரத்திற்கு பிறகு உண்பது. காலையில் எழுந்த உடன் வெறும் தண்ணீர் குடித்த பிறகு நமது வயிற்றுக்குள் செல்லும் பானம் சத்தானதாக இருக்க வேண்டும். அது நமது சுறுசுறுப்பான செயல்பாடுகளுக்கு காரணமாக இருக்கும். வீட்டில் தயாரிக்கப்பட்ட காலை பானங்கள் அதிக நன்மைகள் பயக்கின்றன.
அது காபி, தேநீர் என பால் சேர்க்கப்பட்ட அல்லது சேர்க்கப்படாத பானங்களாக இருந்தாலும் சரி, வெந்தய நீர், வேப்பிலை, நெல்லிக்காய் என வேறு ஆரோக்கிய பானமாக இருந்தாலும் சரி, அவற்றுக்கு என தனித்துவமான பலன்கள் உள்ளன. அதேபோல பப்பாளியின் விதைகளும் காலையில் வெறும் வயிற்றில் உண்டால் நல்ல பலன்களைத் தர வல்லது.
இந்தக் கட்டுரையில், வெற்று வயிற்றில் காலையில் குடிக்கும் டிடாக்ஸ் பானங்களில் ஒன்றைப் பார்ப்போம், இதை நீங்கள் உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்த்து பழக்கமாக்கிக் கொண்டால்,
சுறுசுறுபான உடலைப் பெறலாம். அந்த நாள் நல்ல நாளாக முடியும்.
பப்பாளி விதைகள்
அண்மையில் சில ஆண்டுகளாக இயற்கை வைத்தியம் மற்றும் மாற்று சுகாதார நடைமுறைகளில் மக்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. அதில் பப்பாளி விதையை தண்ணீரில் ஊறவைத்து பருகுவது என்பது ஒரு முக்கியமான விஷயமாக மாறியுள்ளது. பப்பாளி சுவையானது மட்டுமல்ல, பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.