பொங்கல் பண்டிகை: தொலைக்காட்சிகளில் சிறப்பு திரைப்படங்கள்!
பொங்கல் தொடர் விடுமுறையை அவரவர் சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். அந்த கொண்டாட்டத்தில் புதுப்படங்களும் இடம்பெற்றுவிடும்.
ஒன்று பெரிய திரையில் புதிதாக வெளியிடப்படும் திரைப்படங்கள். இரண்டு, வீடுகளில் இருக்கும் சின்னத் திரைகளில் ஒளிபரப்பப்படும் புதிய படங்கள்.
அந்த வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எந்தெந்த சேனல்களில் எந்தெந்த புதுப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதன்படி, சன் தொலைக்காட்சியில் விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படம் ஜன.15 ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது. ராகவா லாரன்ஸ் நடித்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஜன.16 ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விஷால் நடித்த ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ஜன.15 ஆம் தேதியும், ஹிப்ஹாப் ஆதியின் ‘வீரன்’ திரைப்படம் ஜன.16 ஆம் தேதியும் ஒளிபரப்பாகவுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் யோகிபாபு நடிப்பில் வெளியான ‘லக்கிமேன்’, உதயநிதியின் ‘மாமன்னன்’ மற்றும் ‘பரம்பொருள்’ ஆகிய திரைப்படங்கள் ஜன. 15 ஆம் தேதி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. மணிகண்டனின் ‘குட்நைட்’, ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படங்கள் ஜன.