தப்பு செய்ய வாய்ப்பு இருந்தும்.. கண்ணியமா நின்னா வேறலெவல..SKவை வம்பு இழுத்த ப்ளூ சட்டை மாறன்
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் வெளியான நிலையில், அந்த படத்தை விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன் அவரை பங்கமாக வம்புக்கு இழுத்துள்ளார்.
வெள்ளிக்கிழமை வெளியான இந்த படத்தை இயக்குனர் ரவிக்குமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, பாலா சரவணன், பானுப்ரியா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் டி.இமான் கடந்த ஆண்டு அளித்த பேட்டியில், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், இனிமேல் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணிபுரிய வாய்ப்பே இல்லை என்றும் கூறியிருந்தார். என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவர் செய்ததை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.
இமானின் இந்த பேட்டி இணையத்தில் பெரும் புயலை கிளப்பியது. மேலும், இமான் முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ய சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று சோசியல் மீடியாவில் செய்தி பரவியது. மேலும், டி.இமானின் முன்னாள் மனைவி மோனிகாவும், சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசியதால், அது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
சிவகார்த்திகயேன் இமான் பிரச்சனை: பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் பேராதரவு கொண்டாடும் நடிகராக சிவகார்த்திகேயன் இருக்கும் நிலையில், நன்றாக வாழ்ந்த குடும்பத்தை பிரிந்து துரோகம் செய்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும், சிவகார்த்திகேயன் செய்த துரோகத்திற்கு ஆதாரம் இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. இந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் வெளியானால் அது படத்தை பாதிக்கும் என்று சொல்லப்பட்டது.
அயலான் படத்தின் கதை: இந்நிலையில், அயலான் படம் ஆறு ஆண்டு போராட்டத்திற்கு பிறகு வெள்ளிக்கிழமை வெளியானது. இந்த படத்தை விமர்சித்த ப்ளு சட்டை மாறன், இந்த படத்தின் ஹீரோவான சிவகார்த்திகேயன் இயற்கை ஆர்வலராக இருக்கிறார். இவர் இயற்கை விவசாயம் செய்து அதில் தோல்வி அடைந்துவிட்டு, வேலை தேடி சென்னைக்கு வருகிறார். இந்த நேரத்தில், வேற்றுகிரகத்தில் இருந்து ஏலியன் ஒன்று பூமிக்கு வருகிறது. அந்த ஏலியனுடன் சிவகார்த்திகேயனுடன் நட்பாக பழக இருவரும் சேர்ந்து கொண்டு பூமிக்கு வர உள்ள ஆபத்தை தடுத்தாங்களா? இல்லையா? என்பதுதான் அயலான் படத்தோட கதை.
கண்ணியமா நின்னா வேறலெவல: ஆனால், ஏலியான் மனதில் ஒட்டவே இல்லை, குழந்தைகளை மகிழ்விக்கும் வகையிலும் இல்லை என்றார். இதைத் தொடர்ந்து பேசிய மாறன், இந்த படத்தில் ஒரு ஓபனிங் பாடல் இருக்கு அந்த பாட்டில், நீ சாதிய விட்ட வேறலெவல், தட்டிக்கேட்ட வேறலெவல், தப்பு செய்ய வாய்ப்பு இருந்தும்..
கண்ணியமா நின்னா வேறலெவலனு சிவகார்த்திகேயன் பாடி இருக்கிறார் என்று, ப்ளூ சட்டை மாறன் மறைமுகமாக இமான் பஞ்சயத்தை குத்திக்காட்டி நக்கல் அடைந்துள்ளார்.