காரசாரமான பள்ளிபாளையம் சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்; இதுவும் கொங்குநாடு ஸ்பெஷல்தான்!!
தமிழ்நாடு என்றாலே விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றது. வகை வகையான உணவுகளை சமைப்பதிலும், ருசியான உணவுகளை சமைப்பதிலும் உலகப் பெயர் பெற்றவர்கள். தமிழ்நாட்டு உணவு வகைகளுக்கு உலக அளவில் பேரும் புகழும் உண்டு. அப்படி ஒன்று தான் பள்ளிப்பாளையம் சிக்கன். கொங்கு நாட்டில் மிகவும் பிரபலம். இதை எப்படி சமைப்பது என்று பார்ப்போம்.
பள்ளிப்பாளையம் சிக்கன் சமைக்கும் முறை:
10 – கிராம் கொத்தமல்லி விதை
10 – சிவப்பு காய்ந்த மிளகாய்
கால் முடி – தேங்காய் சிறிதாக நறுக்கவும்
20 – நசுக்கிய சிறிய வெங்காயம்
10 – நசுக்கிய பூண்டு
150 – எலும்புடன் கூடிய சிறிய சிக்கன் துண்டுகள்
1/3 – மஞ்சள் தூள்
1/2 – மிளகு தூள்
1/2 – வரமிளகாய் தூள்
2 – கறிவேப்பிலை
10 – கொத்தமல்லி இலை நறுக்கியது
20 – தேங்காய் எண்ணெய்
சிக்கன் ஒரு கிலோ
தயாரிக்கும் முறை:
கடாயில் தேங்காய் எண்ணெய் சூடு செய்யவும்
காய்ந்த சிவப்பு மிளகாய், கொத்தமல்லி விதை, நறுக்கிய தேங்காய், நசுக்கிய பூண்டு, நசுக்கிய சிறிய வெங்காயம், உப்பு போட்டு வதக்கவும். வெங்காயம் பிரவுன் நிறத்தில் வர வேண்டும்
தற்போது சிக்கன் துண்டுகளை சேர்த்து, மஞ்சள் தூள், மிளகு தூள், வரமிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். முழு தீயில் குறைந்தது பத்து நிமிடம் வதக்கவும்
பொடி வாசனை போன பின்னர் சிக்கன் டிரை ஆகிவிடும். தற்போது கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்க்கவும். அப்பப்பா ருசியான பள்ளிபாளையம் சிக்கன் ரெடி.