15 நாள் தொடர்ந்து “இந்த” ஆயில் யூஸ் பண்ணுங்க…முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் மாறும்..!
நீளமான முடி இருக்க வேண்டும் என்று பெண்கள் அனைவரும் விரும்புவார்கள். இதனால் அவர்கள் கூந்தல் பராமரிப்பில் எடுக்கும் அக்கறையால் கூந்தல் மிகவும் அழகாக இருக்கும். ஆனால் நவீன காலத்தில், வேகமான காலத்துக்கு போட்டியாக, சில பெண்கள் கூந்தல் பராமரிப்பில் முன்பு மாதிரி அக்கறை காட்டுவதில்லை. மேலும் முடி உதிர்வதற்கு காற்று மாசுவும் ஒரு காரணமாகும். முடி உதிர்தல் பிரச்சனையால் பல பெண்கள் சிரமப்படுகின்றனர். ஆனால் நல்ல ஆரோக்கியமான டிப்ஸ் மூலம் அழகான கூந்தலைப் பெறலாம். இயற்கையான, வீட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் முடியைப் பாதுகாக்கின்றன. இவை நம்மைச் சுற்றி வளரும் அல்லது வீட்டில் இருக்கும் பொருட்கள். அழகான அடர்த்தியான கூந்தலைப் பெற இந்த எளிய குறிப்புகளைப் பின்பற்றவும்.
வீட்டில் ஹெர்பல் ஹேர் ஆயில் தயாரிக்க தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய்
செம்பருத்திப் பூ
வெந்தயம்
செய்முறை:
வீட்டலேயே ஹெர்பல் ஹேர் ஆயில் தயாரிக்க ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் தேவையான அளவு சேர்க்கவும்.
பிறகு அந்த எண்ணெயில் வெந்தயம் மற்றும் ஐந்து இதழ்கள் செம்பருத்திப் பூவை போடவும்
அவற்றை நன்றாக அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
எண்ணெய் நிறம் மாறி, வாசனை வந்ததும், அடுப்பை அணைத்து ஆற வைக்க வேண்டும்.
எண்ணெய் நன்கு ஆறியதும் அவற்றை ஒரு கண்ணாடி குடுவையில் மாற்றவும்.
வீட்டில் தயாரிக்கப்பட்ட ஹெர்பல் ஹேர் ஆயில் நன்மைகள்:
இந்த எண்ணெயை தினமும் மயிர்க்கால்களில் தடவ வேண்டும். இந்த எண்ணெய் முடி ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் வளர உதவுகிறது. மேலும் பொடுகு தொல்லை, இளநரை போன்ற பிரச்சினைகளை தடுக்கிறது. இந்த எண்ணெய்யை 15 நாட்கள் செய்து வந்தால் பலன் தெரியும். எண்ணெய் தலையில் தூசி படியும். எனவே நீண்ட நாட்களுக்கு எண்ணெய் விடாமல் அடிக்கடி தலைக்கு குளிப்பது நல்லது.