அமெரிக்க போர்க் கப்பல் மீது தாக்குதல்! போர் அடுத்த கட்டம் நகருகிறதா? அமெரிக்காவின் பதில் என்ன?
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நூறு நாட்களை கடந்து வீரியம் குறையாமல் நடந்து வருகிறது. இந்த போரில் பாலஸ்தீனத்தை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடு உள்ளிட அனைத்தையும் இழந்து அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட சில நாடுகள் உதவி செய்து வருகின்றன. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சி படை மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், செங்கடல் பகுதி வழியாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி ஹவுதி கிளர்ச்சி குழு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், செங்கடலில் நிலைநிறுத்தப்பட்டு இருந்த அமெரிக்கா போர்க் கப்பல் மீது அமெரிக்க டெஸ்ட்ராயர் வகை போர்க் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சி படை தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், அமெரிக்க போர் விமானம் பதில் தாக்குதல் நடத்தி சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போருக்கு மத்தியில் முதல் முறையாக அமெரிக்க ராணுவம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு இஒடையிலான எரிசக்தி மற்றும் சரக்கு போக்குவரத்தை மேற்கொள்ளும் ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான கப்பல் போக்குவரத்து மண்டலத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சி குழு தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு, அமெரிக்கா போர்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தியது குறித்து உடனடியாக அறிவிக்கவில்லை என்றும், இந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தின் USS Laboon போர்க் கப்பல் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி இருப்பது என்பது போரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான அறிகுறி போல் தென்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு அமெரிக்க ராணுவம் தரப்பில் நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்பதால் அதன் வீரியத் தன்மை குறித்து அச்சம் நிலவுவதாக கூறப்படுகிறது.