குழந்தைக்கு காலை உணவாக ‘பீட்ரூட் இட்லி’ செஞ்சு கொடுங்க.. சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்!
தினமும் காலை உணவாக இட்லி, தோசை சாப்பிடுவது சலிப்பை ஏற்படுத்துகிறது. நீங்கள் காலை உணவாக வேறு ஏதாவது சாப்பிட விரும்பினால் பீட்ரூட் இட்லி ட்ரை பண்ணுங்கள். இந்த ரெசிபி செய்வது மிகவும் எளிது.. ரெசிபி இதோ…
பீட்ரூட் இட்லி செய்ய தேவையான பொருட்கள்:
வறுத்த ரவை- 1 கப்
தயிர் – 1 கப்
இஞ்சி – சிறிதளவு
பச்சை மிளகாய் – 1
முந்திரி பருப்பு – சிறிதளவு
உளுந்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
பீட்ரூட் (அரைத்தது) – அரை கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
இதற்கு முதலில், பீட்ரூட்டை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டவும், பின் இவற்றுடன் பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி பருப்பு, சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் லேசாக வறுத்த ரவை, உப்பு மற்றும் அரைத்து வைத்த பீட்ரூட் சேர்த்து மாவு பதத்திற்கு நன்றாக கலக்கிக்கொள்ளவும்.
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் அதில், கடுகு, உளுந்தப்பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் கரைத்து வைத்துள்ள மாவுடன் அவற்றை சேர்க்கவும். இப்போது பீட்ரூட் இட்லி செய்வதற்கான மாவு ரெடி..
இதனையடுத்து, இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி வைத்து, மாவை இட்லி அச்சுகளில் ஊற்றி சுமார் 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும். அவ்வளவு தான் டேஸ்டான பீட்ரூட் இட்லி ரெடி!! இந்த இட்லிகளை கடலை அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்!