இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் உணவுத் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது: பியூஷ் கோயல் கருத்து
புதுடில்லி: சுதந்திரத்திற்கு பின், உணவு பற்றாக்குறையை சந்தித்த இந்தியா, வெளிநாடுகளில் இருந்து உணவு பொருட்களை இறக்குமதி செய்தது.
இந்நிலையை மாற்றி, உள்நாட்டில் இந்தியாவின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் அரசாங்கம், 1965-ல் இந்திய உணவுக் கழகத்தை (எஃப்சிஐ) உருவாக்கியது.
இந்திய உணவுக் கழகம், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடம் இருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்து, விநியோகம் செய்கிறது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், உணவுக் கழகம் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆன நிலையில் அதன் பங்களிப்பு குறித்து பேசினார்.
அவர் பேசுகையில், “இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் உணவுத் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது.விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்து ஏழை மக்களுக்கு விநியோகம் செய்ததில் அதன் சாதனை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த சங்கம் மூலம் இந்தியாவின் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது,” என்றார்.