அறையில் நெருப்பு மூட்டிய இருவர்.. மூச்சுத்திணறி பலி.. போலீஸ் விசாரணை..!!
டெல்லியில் உள்ள இந்தர்பூரி பகுதியில் நேபாலை சேர்ந்த ராம் பகதூர் மற்றும் அபிஷேக் ஆகிய இருவர் ரூம் ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை அவர்களது ரூம் கதவை வெகு நேரமாக தட்டியும் திறக்கவில்லை என்று சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த போலீசார் ரூம் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். அவர்களை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவர்களது அறையில் நெருப்பு மூட்டியதற்கான அடையாளங்கள் இருந்துள்ளது. அதோடு அறையில் இருந்த ஒரே ஒரு ஜன்னலும் அடைத்திருந்துள்ளது. இதனால் மூச்சு திணறி அவர்கள் இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.