”ராமர் என் கனவில் வந்தார்” : லாலு மகனால் பரபரப்பு
பாட்னா: ”ராம பிரான் என் கனவில் வந்தார், கும்பாபிஷேக விழாவுக்கு வரமாட்டேன் அவர் கூறினார்” என பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகனும் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்தார்.உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் குழந்தை ராமர் சிலையை கருவறையில் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு வரும் 22ல் நடக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட 6,000க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இதில் பங்கேற்க பல அரசியல் தலைவர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டு மக்கள் ராமர் கோயிலுக்கு வருகை புரிய பா.ஜ., – ஆர்.எஸ்.எஸ்., மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.இந்த நிலையில், பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகனும் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ”ஜன.,22ம் தேதி கும்பாபிஷேகத்திற்கு வர வேண்டும் என்பது கட்டாயமா? விழாவை புறக்கணித்த நான்கு சங்கராச்சாரியார்களின் கனவில் ராமர் வந்துள்ளார்.
அதேபோல், என் கனவிலும் ராம பிரான் தோன்றினார். கும்பாபிஷேக விழாவுக்கு நான் வர மாட்டேன் என்று என்னிடம் கூறினார்.” எனப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.