BBA, BCA படிப்புகளுக்கு ஆப்பு.. இனி இது கட்டாயம்.. UGC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!
இனி பிபிஏ, பிசிஏ படிப்புகளை பயிற்றுவிக்கும் அனைத்து கல்லூரிகளும் ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற வேண்டியது கட்டாயம் என பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக மானிய குழுவின் செயலாளர் மாணிக் ஆர் ஜோஷி அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றுலா அறிக்கையில் “தொழில்நுட்பக் கல்வி மற்றும் அது தொடர்பான படிப்புகளை ஏஐசிடிஇ வரையறை செய்வதுடன் கண்காணித்து வருகிறது.
தொழில்நுட்ப கல்வியின் என்பது பொறியியல் தொழில்நுட்பம் நகர திட்டமிடல் கட்டிடக்கலை மேலாண்மை மருத்துவம் பயன்பாட்டு கலை மற்றும் கைவினைப் பொருட்கள் சார்ந்த படிப்புகள் ஆகும். அதன் அடிப்படையில் எம்பிஏ, எம்சிஏ ஆகிய முதுநிலை படிப்புகளை ஒழுங்குப்படுத்தி அதற்கு அங்கீகாரம் வழங்கும் பணிகளை ஏசிஐடிஇ தற்போது மேற்கொண்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக வரும் கல்வி ஆண்டு முதல் பிபிஏ, பிஎம்எஸ் மற்றும் பிசிஏ படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கு ஏஐசிடிஇ முடிவு செய்துள்ளது. கல்வி தரத்தை முதுநிலை மற்றும் இளநிலை படிப்புகளில் ஒரே மாதிரியாக பராமரிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.