மும்பை: ரூ.116 கோடிக்கு ஆரம்பர வீட்டை வாங்கிய பெண்.. யார் இந்த விராத்திகா குப்தா..!!
மும்பையில் ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது நாட்டில் பலரது ஆசையாகும். ஆனால் மும்பையில் வீடு விலை சாமானிய மக்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாது.
ஆனால் சிலர் அதை கடந்து தங்களது கனவு இல்லத்தை எப்படியாவது மும்பையில் வாங்கி விடுகின்றனர்.பேஷன் டிசைனரான விராத்திகா குப்தா, ஆடம்பர ஹோம் டெக்கோர் பிராண்டான மேய்சன் சியாவின் சிஇஓவாக உள்ளார். அவர் மும்பையில் ரூ.116 கோடிக்கு ஒரு அப்பார்ட்மெண்ட்டை வாங்கியுள்ளார். மும்பையின் லோயர் பரேல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 49ஆவது தளத்தில் இந்த அப்பார்ட்மெண்ட்டை விராத்திகா குப்தா விலைக்கு வாங்கியுள்ளார். இதற்கான பத்திரச் செலவு மட்டும் ரூ.5.82 கோடி ஆகும்.ஜனவரி 7 ஆம் தேதியன்று இந்த அப்பார்ட்மெண்ட்டை விராத்திகா குப்தா வாங்கியுள்ளார். இந்த ஆடம்பரமான அப்பார்ட்மெண்ட் 12,138 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்கு எட்டு பார்க்கிங் ஸ்பேஸ் கொண்டுள்ளது.
நாட்டின் பெருமைக்குரிய நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆப் பேஷன் டெக்னாலஜியில் விராத்திகா குப்தா தனது பட்டப்படிப்பை முடித்தார்.பேஷன் துறையில் அப்பாரல் டிசைனராக விராத்திகா குப்தா தனது பயணத்தைத் தொடங்கினார். 2009 முதல் 2022 ஆம் ஆண்டு வரை அங்கு வேலைபார்த்து வந்தார்.2022 ஆம் ஆண்டில் மேய்சன் சியா ஹோம் டெக்கோர் பிராண்டை விராத்திகா குப்தா தொடங்கினார்.
அவருக்கு பயணங்கள் மிகவும் பிடித்தமான விஷயமாகும். விராத்திகாவின் மேய்சன் சியா என்பது உலகெங்கிலும் இருந்து கவனமாகக் கையாளப்பட்ட வாழ்க்கை முறை தயாரிப்புகளைக் கண்டறிந்து வாங்க உங்களை அனுமதிக்கும் சரியான இடமாகும்.வீட்டு உரிமையாளர் மற்றும் வடிவமைப்பாளருக்கான பாணி-ஆர்வமுள்ள மற்றும் நிபுணருக்கான இடம்.
நவீன அலங்கரிப்பாளருக்கு ஒரு புதிய வழி இந்த நிறுவனம். மிக முக்கியமான அழகியல் மற்றும் சிக்கலான வடிவமைப்புகளுடன், இது உலகெங்கிலும் உள்ள சிறந்த பிராண்டுகளை உங்களுக்குக் கொண்டு வருகிறது.புதுமையான மற்றும் பாரம்பரிய வடிவமைப்புகள் மற்றும் வீட்டு அலங்காரத்தில் சுவைகளைத் தூண்டுகிறது.