கியா களமிறக்க போகும் புதிய காரின் விலை இவ்ளோதானா! எழுதி வெச்சுக்கோங்க! ஷோரூம்ல எல்லாரும் வரிசைல நிக்க போறாங்க

இந்திய சந்தையில் மிக குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்த கார் நிறுவனங்களில் ஒன்று கியா (Kia). தற்போதைய நிலையில் கியா சொனெட் (Kia Sonet), கியா செல்டோஸ் (Kia Seltos), கியா கேரன்ஸ் (Kia Carens) மற்றும் கியா இவி6 (Kia EV6) உள்ளிட்ட கார்களை கியா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து கொண்டுள்ளது.

இந்த வரிசையில் மற்றொரு புதிய கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய கியா நிறுவனம் வேகமாக தயாராகி வருகிறது. தற்போதைய நிலையில் இந்த கார் ‘ஏஒய்’ (AY) என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு கொண்டுள்ளது. அனேகமாக கியா க்ளாவிஸ் (Kia Clavis) என்ற பெயரில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இது காம்பேக்ட் எஸ்யூவி (Compact SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். அனேகமாக சப்-4 மீட்டர் க்ராஸ்ஓவர் (Sub-4 Meter Crossover) காராக இது இருக்கலாம். இந்திய சந்தையில் கியா சொனெட் மற்றும் கியா செல்டோஸ் கார்களுக்கு இடையே, கியா க்ளாவிஸ் கார் நிலைநிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புத்தம் புதிய கியா க்ளாவிஸ் காரின் சோதனை ஓட்டம் தற்போது தென் கொரியாவில் (South Korea)தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கார் பாக்ஸி டிசைனை கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் மூலமாக அறிய முடிகிறது.

அதே நேரத்தில் ட்யூயல் டோன் அலாய் வீல்கள் போன்ற அம்சங்களையும் நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் கியா க்ளாவிஸ் காரை பற்றிய தகவல்கள் எல்லாம் தற்போதைய நிலையில் மிகவும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. எனினும் ஹைப்ரிட் உள்பட பல்வேறு இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஒன்றாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அதிகபட்சமாக 118 பிஹெச்பி பவர் மற்றும் 172 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம். இது தவிர கியா நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, இன்னும் பல்வேறு இன்ஜின் ஆப்ஷன்களையும் இந்த கார் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

 

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *