ரொம்ப சீப் ரேட் தான்! கார்ல இந்த பெருட்கள் இல்லேன்னா ரொம்ப கஷ்டமாகிடும்!
சொந்தமாக கார் வைத்திருக்கும் பலர் சமூகத்தில் பெரிய அந்தஸ்தை வைத்திருந்தாலும் காரில் பயணம் செய்யும்போது அவர்களுக்கு சில சிக்கலான சூழ்நிலைகள் ஏற்படும். இந்த சூழ்நிலைகளில் கட்டாயம் மற்றவர்களின் உதவி தேவைப்படும். அப்பொழுதுதான் அவர்களால் தனது பயணத்தை நிம்மதியாகவும் எந்த பிரச்சனையும் இல்லாமலும் தொடர முடியும். இப்படியான நேரங்களில் மற்றவர் உதவி கிடைப்பது என்பது எல்லா நேரத்திலும் சாத்தியம் கிடையாது.
இப்படியாக சில சூழ்நிலைகளில் சிக்கல் ஏற்படும் போது மற்றவர் உதவி இல்லாமல் அந்த சிக்கலை சமாளிப்பதற்காக மார்க்கெட்டில் சில பொருட்கள் உள்ளன. இந்த பொருட்களை வாங்கி கார்களில் வைத்துக் கொள்வதன் மூலம் அந்த சூழ்நிலை வரும்போது சிக்கல் ஏற்படாமல் அதை எளிமையாக சமாளிக்க முடியும். இப்படியாக மார்க்கெட்டில் உள்ள முக்கியமான சில பொருட்களை பற்றிய நாம் இங்கே காண போகிறோம்.
நீங்கள் சொந்தமாக கார் வைத்திருக்கிறீர்கள் என்றால் முதலில் உங்கள் காரில் இருக்க வேண்டிய பொருள் பேட்டரி பவர் இன்ஃப்ளேட்டர். அதாவது உங்கள் கார் நடுவழியில் பஞ்சராகி நின்று விட்டால் காரின் டயரில் காற்று ஏற்றுவதற்காக உள்ள பொருளாகும். இதன் விலை ரூ2000 முதல் 4000 வரை விற்பனை ஆகிறது. இதை வாங்கி காரில் வைத்துக் கொண்டால் எந்த இடத்தில் உங்கள் கார் பஞ்சர் ஆனாலும் இந்த பொருள் உங்களுக்கு உதவும்.
டேஷ்போர்டு கேமரா: இந்த டேஷ்போர்டு கேமரா பலருக்கு பல்வேறு விதமான வகையில் உதவுகிறது. முக்கியமாக ஒட்டுமொத்த பயணத்தையும் எந்தவித சிரமமும் இல்லாமல் இந்த டேஷ்போர்டு கேமராவில் ரெக்கார்டு செய்து கொள்ளலாம். அதே நேரம் ஏதாவது விபத்து நடந்தால் இந்த டேஷ்போர்டு கேமராவில் உள்ள பதிவுகளை ஆதாரமாக வைத்து இன்சூரன்ஸ் பெறுவதற்கு உதவியாக இருக்கும். இதனால் கட்டாயம் டேஷ்போர்டு கேமராவை உங்கள் கார்களில் பொறுத்திக் கொள்ளுங்கள்.
மினி ஏர் பியூரிஃபையர்: இன்று பெரும்பாலான டாப் மாடல் கார்களில் ஏர் பியூரிஃபையர் என்பது ஒரு முக்கியமான அம்சமாக வந்துவிட்டது. ஆனால் சில கார்களில் இந்த அம்சம் இல்லை. இதனால் வெளிமார்க்கெட்டில் இதை வாங்கி உங்கள் கார்களில் பொருத்திக் கொள்ள முடியும். யூஎஸ்பி மூலம் இயங்கும் இந்த ஏர் பியூரிஃபையர் காரில் பயணிப்பவர்களுக்கு எந்தவித மாசு தொடர்பான பிரச்சனையும் இல்லாமல் பாதுகாக்கும். இது ரூ2000-5000 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே: காரில் செல்லும்போது அடிக்கடி எவ்வளவு வேகத்தில் செல்கிறீர்கள் எவ்வளவு பெட்ரோல் மீதம் இருக்கிறது என்ற தகவல்களை அடிக்கடி ஸ்பீடோமீட்டரில் பார்த்த செல்கிறீர்களா? இதனால் உங்களுக்கு கவன சிதறல் ஏற்படுகிறதா? இந்த பிரச்சனைக்கு தீர்வாக ஹெட்சப் டிஸ்ப்ளே என்ற கருவி மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது.
இந்த கருவியை வாங்கி உங்கள் வாகனத்தில் பொருத்தி கொண்டால் உங்கள் வாகனத்தின் கண்ணாடி பக்கத்திலேயே ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே போல இந்த தகவல்கள் எல்லாம் கிடைக்க பெறும். இதனால் நீங்கள் கவனம் சிதறல் இல்லாமல் வாகனம் ஓட்ட முடியும். இந்த கருவி ரூபாய் 2000 முதல் 5000 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
செல்போன் ஹோல்டர்: இன்று செல்போன் பயன்படுத்தாதவர்களை பார்க்கவே முடியாது. அந்த அளவிற்கு அனைவரிடமும் செல்போன் வந்துவிட்டது. இந்நிலையில் செல்லும் பலர் செல்போனை வைக்க இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். புதிதாக வரும் கார்களில் இதற்கான இட வசதிகள் வழங்கப்பட்டிருந்தாலும் பழைய கார்களில் இந்த வசதிகள் இல்லை.
மார்க்கெட்டில் மிக குறைவான விலையில் இந்த செல்போன் ஹோல்டர் விற்பனையாகி வருகின்றன. அதை வாங்கி பொருத்திக் கொள்வதன் மூலம் பழைய கார்களிலும் எந்த பிரச்சினையும் இல்லாமல் செல்போனை சுலபமாக எடுத்துச் செல்ல முடியும். பலர் கார்களில் செல்லும் போது செல்போனை தவற விட்டு செல்கின்றனர்.