பிரான்சிலிருந்து புறப்பட்ட புலம்பெயர்ந்தோர் படகு விபத்து; உயிரிழப்பு எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது
பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் பிரான்சிலிருந்து புலம்பெயர்ந்தோர் புறப்பட்ட படகு ஒன்று ஆங்கிலக்கால்வாயில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நான்கு பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
பிரான்சிலிருந்து புறப்பட்ட புலம்பெயர்ந்தோர் படகு விபத்து
பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் பிரான்சிலிருந்து புலம்பெயர்ந்தோர் புறப்பட்ட படகு ஒன்று, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் ஆங்கிலக்கால்வாயில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த துயர சம்பவத்தில் நான்கு பேர் பலியான நிலையில், கடற்கரையில் மேலும் ஒரு புலம்பெயர்வோரின் உடல் கரையொதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது. உயிரிழந்தோர், சிரியா நாட்டவர்கள் என கருதப்படுகிறது.
மேலும், கடுங்குளிரில் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த சுமார் 30 பேரை மீட்டதாக பிரான்ஸ் கடற்படை தெரிவித்துள்ளது. அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.