இது தெரியுமா ? இந்திய ரூபாயை 35 நாடுகளில் பயன்படுத்தலாம்..!
இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு பயணம் செய்யும் போது அந்த நாட்டு நாணயங்களை தான் பயன்படுத்த வேண்டியுள்ளது.
ஆனால், இந்தியர்கள் இந்திய ரூபாயை 35 நாடுகளில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதாவது, இந்திய ரூபாயை தங்களது நாட்டில் பயன்படுத்த தற்போது வரையிலும் 35 நாடுகள் ஒப்புதல் வழங்கியுள்ளதாக சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
இந்திய ரூபாயின் 100 ஆண்டுகால பயணம்” என்ற தலைப்பில் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பங்கேற்றார். இதில் அவர் பேசியபோது, ‘பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் ரூபாயின் மதிப்பு ஸ்திரமாக உள்ளது என்றும் நமது ரூபாயை தங்கள் நாட்டில் பயன்படுத்த இதுவரை 35 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதாவது, ஜெர்மனி, கயானா, இஸ்ரேல், கென்யா, பிஜி, மலேசியா, மொரிஷியஸ், மியான்மர், நியூசிலாந்து, ஓமன், ரஷ்யா, சீஷெல்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தான்சானியா, உகாண்டா மற்றும் இங்கிலாந்து உட்பட 35 நாடுகளில் இந்திய ரூபாயை பயன்படுத்தலாம். அதாவது, அமெரிக்க டாலரின் மதிப்பு நிகராக இந்தியாவின் ரூபாயும் திடமாக ஒரு மதிப்பை பெற்றுள்ளதால் சர்வதேச நாடுகளின் மதிப்பில் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த 35 நாடுகளுக்கு பயணம் செய்வோர் அந்தந்த நாட்டின் பணம் அல்லது அமெரிக்க டாலரை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் இந்திய ரூபாயை நேரடியாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.