Guru Bhagavan: சனியும் சுக்கிரனும் சேர்ந்து அதிர்ஷ்டம் கொடுக்க போகும் ராசிகள்
குருபகவான் மங்கல நாயகனாக விளங்கி வருகிறார் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல குரு பகவான் ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், மகிழ்ச்சி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக இவர் விளங்கி வருகிறார்.
தற்போது மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகிறார். வக்கிர நிலையில் பயணம் செய்து வரும் குரு பகவான் வரும் டிசம்பர் 31ஆம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு பகவானின் இடமாற்றம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
குரு பகவானின் வக்ர நிவர்த்தி குல தீப ராஜயோகத்தை உருவாக்கியுள்ளது. வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு சில ராசிகள் மிகப்பெரிய ராஜயோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மிதுன ராசி
வரக்கூடிய புத்தாண்டில் நீங்கள் ராஜயோகத்தை பெறப்போகின்றீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் உருவாகும். கடன் சிக்கல்கள் அனைத்தும் குறையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
சிம்ம ராசி
உங்களுக்கான ராஜயோகம் வரக்கூடிய புத்தாண்டில் கிடைக்கப் போகின்றது. புதிய வேலை வாய்ப்புகள் உங்களுக்கு அமையும். செலவுகள் அனைத்தும் குறையும். சேமிப்பு அதிகரிக்கும். வருமானத்திற்கு இந்த குறையும் இருக்காது. குடும்பத்தினரால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் மற்றும் தொழில் நல்ல முன்னேற்றம் அடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
கன்னி ராசி
சிறப்பான வாய்ப்புகள் வரும் புத்தாண்டில் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தினரால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிதி நிலைமையில் முன்னேற்றம் உண்டாகும்.