அடேயப்பா… அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா… 14 நாட்களில் ரூ.50,000 கோடி வருவாய்!

நாடு முழுவதும் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. இம்மாதம் 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு விழா கொண்டாட்டங்களும், அதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைப்பெற்று வரும் நிலையில், குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு, இந்த ஜனவரி மாதத்தில் கடந்த 14 நாட்களில் மட்டுமே ரூ.50,000 கோடி வருவாய்க்கான பொருளாதார ஊக்கம் கிடைக்கும் என அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கணித்துள்ளது.

 

பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் 3 அடுக்குகள் கொண்ட அயோத்தி ராமர் கோயிலில், தரைத்தளம் மட்டுமே தற்போது தயாராகி உள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் ஏனைய 2 தளங்களுக்கான பணிகள் நிறைவடையும்.

அயோத்தி கோயில் மட்டுமன்றி, அயோத்தி நகரை சர்வதேச ஆன்மிக சுற்றுலாத் தலமாக்கும் முயற்சியில் பல்லாயிரம் கோடிகள் செலவிடப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் மின் வாகனங்கள் என அயோத்தி மாவட்டமே புத்துயிர் பெற்றுள்ளது.

தற்போதைய அயோத்தி நகரம் தொலைநோக்கு அடிப்படையில் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. விருந்தினர்கள், பக்தர்களை வரவேற்க நவீன வசதிகள் செய்யபடுவதோடு, வளரும் நகரின் மாசினை குறைப்பதற்கான ஏற்படுகளும் பசுமை வழியில் செய்யப்பட்டுள்ளன.

இவற்றுக்கான செலவினங்களுக்கு அப்பால், ராமர் கோயில் விழாவினை முன்னிறுத்தி வருவாய் ஆதாயமும் உண்டு என்று அனைத்திந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பான சிஐஏடி தெரிவித்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *