குழந்தைப் பொங்கல் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதி கிராமங்களில் பல வருடங்கள் தொட்டு வழி வழியாக வினோத வழிபாட்டை அப்பகுதி மக்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், லம்பாடி இனப் பெண்ணிற்கு கோயில் எழுப்பி, குழந்தைகளின் அழுகையை கட்டுப்படுத்தி, நோய் நொடியின்றி பாதுகாப்பதாகக் கருதி, அக்கோயிலில் குழந்தைப்பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் வினோதம் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, வாழப்பாடி அருகில் உள்ள ஏ.குமாரபாளையம் மற்றும் மெட்டுக்கல் கிராமங்கள் வழியாக, நிறைமாத கர்ப்பிணியான மலைவாழ் லம்பாடி இனப் பெண் ஒருவர் வழிப்போக்கராக வந்தார். இருள் சூழ்ந்ததால் சொந்த கிராமத்திற்குச் செல்ல முடியாத அவர், மெட்டுக்கல் மற்றும் குமாரபாளையம் கிராம எல்லையில் சாலையோரத்தில் இருந்த எட்டி மரத்தடியில் தங்கினார்.
அப்போது அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. கொஞ்ச நேரத்தில் மரத்தடியிலேயே அந்தப் பெண் அழகான குழந்தையை பெற்றெடுத்த அவளும், குழந்தையும் அந்த இடத்திலேயே இறந்துவிட்டனர்.