தை மாத ராசிபலன்கள்… யார் யாருக்கு ஏற்றம் தரும்… இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது காலம் காலமாக நம்மிடையே கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழமொழி. இந்த பழமொழிக்கேற்ப தை மாதம் பிறந்ததும் குறிப்பிட்ட ராசிக்காரங்களுக்குப் அதிர்ஷ்டம் கொட்டப்போகுது.
இந்நாளில், சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு செல்கிறார். சூரியனின் இந்த ராசி மாற்றத்தினால் மிகச் சிறப்பான பலன்களைப் பெறக்கூடிய ராசிக்காரர்கள் யார் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
மேஷம்:
செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே
தொழில் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை உணரப்போகிறீர்கள். சில நேரங்களில் அதிரடியான செயல்பாடுகளால் பணியிடத்தில் சவால்கள், மோதல்கள் உருவாகலாம். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கிய குறைபாடுகள் உருவாகலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. காரியத் தடை , காலதாமதம் ஏற்படலாம். தினசரி கடவுள் வழிபாடு அனுகூலமான பலன்களை தரலாம். திருச்செந்தூர் முருகனை வழிபட்டு வந்தால் விருப்பமான காரியங்கள் நிறைவேறும் வாய்ப்புக்கள் அதிகம்.
ரிஷபம்:
சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே
சவால்கள் நிறைந்த காலகட்டம் இது. இந்த மாதத்தில் தொடக்கத்தில் இருந்தே வாகனப் பயணங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது உத்தமம். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழிலில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். அரசு வேலைகளில் ஆதாயம் பெருகும். இந்த காலகட்டத்தில் திருவண்ணாமலை சென்று வந்தால் வாழ்க்கையில் பெருமையும் புகழும் அதிகரிக்கும்.
மிதுனம்:
புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே
தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் திடீர் பணவரவு, வெற்றி கிட்டும். சுபகாரியங்களில் சவால்கள் ஏற்படலாம். உடல் நலக் குறைபாடு உருவாகலாம். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறலாம். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்படுவது உத்தமம்.
திருமோகூர் காளமேகப் பெருமாளை வழிபாடு செய்துவரும் துன்பங்கள் தூர விலகும்.