பொங்கல் நாளில் இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகை பொங்கல் திருநாள். அறுவடை திருநாளாகவும் செழிப்பை பறைசாற்றும்விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
வட மாநிலங்களில் மகர சங்கராந்தியாகக் கொண்டாடப்படுகிறது.
விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படுவதால் பொங்கல் பண்டிகை முக்கியத்துவம் பெறுகிறது. இந்நாளில் சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வழிபாடு செய்ய வேண்டும். மார்கழி மாத கடைசி நாளான போகி பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பொங்கலில் வெல்லம் சேர்ப்பது சூரிய பகவானுக்கு செய்யப்படும் நேர்த்திக்கடனாக போற்றப்படுகிறது.
காலையில் எழுந்து சுத்தமாக குளித்து சூரிய பகவானை வழிபாடு செய்து சிவப்பு மலர்களை வைத்து பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த திருநாளில் சூரியனின் காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபட்டால் வறுமை நீங்கும் என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு. ஒரு செம்பு பாத்திரத்தில் பாலை எடுத்துக் கொண்டு சூரிய பகவானை வழிபாடு செய்து அந்த பாலை சிறிதளவு நீரில் ஊற்றி வழிபாடு செய்தால் நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும் என்பது ஐதீகம்.