என் மகள் இப்படி தான் சம்பாதிக்கிறார்.. சச்சின் வைத்து Deep Fake Video.. பொங்கி எழுந்த டெண்டுல்கர்
மும்பை : டீப் ஃபேக் வீடியோ என்ற தொழில்நுட்பம் பல பிரபலங்கள் வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது. ராஷ்மிகா மந்தானாவில் தொடங்கி தற்போது கிரிக்கெட் வீரர் சச்சின் வரை இதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
டீப் பேக் வீடியோ மூலம் சில விஷமிகளால் உருவாக்கப்படும் வீடியோ உண்மையா? பொய்யா என்பது கூட தெரியவில்லை.அந்த அளவு தெளிவாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஷமிகள் ஏமாற்றுகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது சச்சின் டெண்டுல்கர் டீப் ஃபேக் வீடியோவில் சிக்கியிருக்கிறார். அந்த வீடியோவில் சச்சின் தனது மகள் சாராவை பற்றி பேசுவது போல் வீடியோ வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதில் தனது மகள் ஆன்லைன் வீடியோ கேம் மூலம் பல பணத்தை சம்பாதித்து வருவதாகவும் இதனை ரசிகர்கள் நீங்களும் பயன்படுத்தலாம் என்று சச்சின் கூறுவது போல் டீப் ஃபேக் வீடியோ தொழில்நுட்பத்தை வைத்து வெளியிட்டு இருக்கிறார்கள்.