வீடியோ- மைதானத்திற்குள் புகுந்து கோலியை கட்டி பிடித்த ரசிகர்.. தூக்கி சென்ற போலீசார்
இந்தூர் : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் களம் இறங்கிய விராட் கோலி 14 மாதத்திற்கு பிறகு இந்திய டி20 அணியில் இடம் பெற்று இருந்தார். இதனால் நேற்றைய ஆட்டத்தை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள்.
விராட் கோலி விளையாடுகிறார் என்ற காரணத்தினால் இந்தூரில் கோலாகலம் பூண்டிருந்தது இந்த போட்டியில் விராட் கோலி தொடக்க வீரராக இல்லாமல் எப்போதும் போலவே நம்பர் மூன்றாவது வீரராக களம் இறங்கி பதினாறு பந்துகளை எதிர்கொண்டு 29 ரன்களை சேர்த்தார்.
இதில் 5 பவுண்டரிகள் அடங்கும். விராட் கோலியின் அபார ஆட்டம் ரசிகர்களுக்கு நல்ல கொண்டாட்டத்தை கொடுத்தது. இந்த நிலையில் இந்திய அணி பில்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென்று மைதானத்திற்குள் புகுந்த ரசிகர் ஒருவர் விராட் கோலியை கட்டிப்பிடித்து காலில் விழின்றார். இதனை அடுத்து மைதானத்தில் இருந்த பாதுகாவலர்கள் அந்த ரசிகர்களை தூக்கி இழுத்துச் சென்றனர்.
அப்போது விராட் கோலி அந்த ரசிகர்களை ஏதும் செய்ய வேண்டாம் என்று கூறினார். இந்த நேரத்தில் போலீசார் அந்த ரசிகரை கைது செய்தனர். விசாரணையில் அவர் கோலியின் மிக தீவிர ரசிகர் என்றும் கோலியை கட்டி பிடிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார்.