அதிர்ச்சி… பெண் வேடத்தில் போட்டித்தேர்வு எழுதிய ஆண்… காதலிக்காக துணிந்து மோசடி!

காதல் என்னவெல்லாம் செய்யும்? காதலுக்கு கண் இல்லை என்பார்கள். அதையும் தாண்டி காதல் என்ன கன்றாவிகளை எல்லாம் செய்யும் என்பது பஞ்சாப் மாநிலத்தில் நிரூபணமாகி இருக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் தனது காதலியைப் போல் வேடமிட்டு, ஆதார் கார்டு, ஹால் டிக்கெட் என போலி ஆவணங்களை உருவாக்கி போட்டித்தேர்வு எழுத சென்ற காதலனை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் பகுதியில் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜனவரி 7ம் தேதி நடைபெற்றது. பாபா பரித் பல்கலைகழகம் சார்பில் டிஏவி பப்ளிக் பள்ளியில் இந்த தேர்வுகள் நடைபெற்றது. இதில் பரம்ஜித் கவுர் என்ற பெண் ஒருவர் தேர்வு எழுதுவதற்காக வருகை தந்திருந்தார். சிவப்பு நிற வளையல்கள், உதட்டுச் சாயம் மற்றும் பெண்களின் உடையில் இருந்ததால் அவரை உள்ளே அனுமதித்துள்ளனர்.

இதையடுத்து உடனடியாக அவரைப் பிடித்த அதிகாரிகள், போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அவரது பெயர் அங்ரேஷ் சிங் என்பதும், அவர் பரம்ஜித் கவுரின் காதலன் என்பதும் தெரியவந்தது. பரம்ஜித்தின் விண்ணப்பங்களை பல்கலைக்கழக நிர்வாகம் நிராகரித்து இருந்த நிலையில், அவருக்கு பதிலாக இந்த தேர்வை எழுத அங்ரேஷ் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது போலி ஆவணங்களை தயாரித்ததாக கைது செய்துள்ள போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாபில் இது போன்ற தேர்வுகளில் ஆள்மாறாட்டங்களில் ஈடுபடுவது புதிதல்ல. கடந்த 2011ம் ஆண்டு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்ற போது, ஆள்மாறாட்டம் செய்தவர்களை போலீஸார் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *