சீண்டித் தான் பாரேன்… ஜல்லிக்கட்டு வாடிவாசல் அருகே புகுந்த நாயால் ரகளை!

ன்று காலை மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென வாடிவாசல் பகுதியில் நாய் ஒன்று எங்கிருந்தோ குறுக்கே உள்ளே நுழைந்ததால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இன்று காலை 7 மணிக்கு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக காளைகளை அடக்கி வருகின்றனர். இந்த போட்டியில் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். உதவி ஆய்வாளர் உட்பட 8 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4வது சுற்று முடிவில் இதுவரை 415 காளைகள் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டுள்ளது. 200 மாடுபிடி வீரர்கள் விளையாடியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர். இந்நிலையில், போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, நாய் ஒன்று வாடிவாசல் பகுதியிலிருந்து மைதானத்திற்குள் புகுந்தது. நாய் வெளியே ஓடிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது வெளியேறாமல், மைதானத்தில் போடப்பட்டிருந்த தேங்காய் நார்களில் விளையாடியபடி படுத்திருந்தது.

இதையடுத்து மாடுபிடி வீரர்களும், பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீஸாரும் நாயை விரட்ட முயன்றனர். அப்போது நாய் அங்கிருந்து நகராமல் இருந்ததால், தன்னை பிடிக்கும்படி கூறுகிறதோ என அங்கு சிரிப்பலை எழுந்தது. இதையடுத்து, சிறிது நேரம் கழித்து நாய் அங்கிருந்து ஓடியது. நாய் மைதானத்தில் இருந்ததால் மாடுகள் அவிழ்ப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நாய் சென்றபின் போட்டி மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *