3 நாட்கள் சிறை வைத்து +1 மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர்!
ன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்ட பழகிய ப்ளஸ்-1 மாணவியை, திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று மூன்று நாட்களை அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதுமே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நாகர்கோவில் மேல கலுங்கடியைச் சேர்ந்தவர் வசந்தராஜ் (23) என்பவருக்கும் அதே நாகர்கோவிலில் ப்ளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் அவர்களுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்திய நிலையில், மாணவியை தனது நண்பரின் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார் வசந்தராஜ்.
இதையடுத்து வசந்தராஜின் நண்பரின் வீட்டிற்கு மாணவியும் சென்ற போது, வீட்டில் யாருமில்லாமல் வசந்தராஜ் மட்டுமே இருந்தார். அந்த சமயத்தில் மாணவியிடம் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி, உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும், விரைவில் திருமணம் செய்து கொள்கிறேன் என கூறியபடி மாணவியை தன்வசப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் 3 நாட்களும் அங்கேயே சிறை வைத்து மாணவியின் வாழ்க்கையை சீரழித்தார்.
மேலும் இந்த சம்பவத்தை வெளியே கூறக்கூடாது என மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் வீடு திரும்பிய மாணவி, நடந்த விவரத்தை தாயாரிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வசந்தராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைதான வசந்தராஜ் மீது ஏற்கனவே ஒரு போக்சோ வழக்கு கடந்த 2020-ம் ஆண்டு பதிவாகி உள்ளது. இதுதவிர வடசேரி காவல் நிலையத்தில் திருட்டு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.