Kidney Care : சிறுநீரகத்தை பாதுகாக்க உதவும் ஆயுர்வேத மருத்துவ ரகசியம்!
உடலில் போதிய நீர்ச்சத்துடன் இருப்பதுதான் ஆய்ரவேதத்தின்படி, நலனுடன் இருப்பீர்கள் என்பதற்கான அறிகுறி. அது உடலில் உள்ள மற்ற பாகங்கள் குறிப்பாக சிறுநீரககத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லது. ஆயுர்வேதத்தின்படி, உடல் வாதம், பித்தம், கபம் என உடல் மூன்றாக பிரிக்கப்படுகிறது. ஒவ்வொன்றும் உடலில் ஒவ்வொரு வேலையை செய்கிறது. நீர்ச்சத்துதான் ஆயுர்வேத மருத்துவத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அது வாதம், பித்தம், கபம் மூன்றையும் நேரடியாக பாதிக்கிறது.
வாதம்
காற்று மற்றும் இடத்துடன் தொடர்புடையது. வாதம் உடலின் இயக்கம் மற்றும் தொடர்புகொள்வதுடன் தொடர்புடையது. உடல் சரியான நீர்ச்சத்துடன் இருக்கும்போது, வாத சமமின்மையை போக்கி, மூட்டுவலி, உடலில் இருக்கம் போன்றவற்றை தடுக்கிறது.
பித்தம்
நெருப்பு மற்றும் தண்ணீர் மண்டலத்தை பித்தம் கட்டுப்படுத்துகிறது. செரிமானம், உடல் வளர்சிதை மாற்றம் மற்றும் ஹார்மோன் சமம் ஆகியவற்றுக்கு உதவுகிறது. பித்தத்தின் எரிச்சல் ஏற்படுத்தும் குணத்தை நீர்ச்சத்து குளுமையடையச் செய்கிறது. அழற்சி மற்றும் அசிடிட்டி போன்றவற்றை தடுக்கிறது.
கபம்
பூமி மற்றும் தண்ணீர் மண்டலங்களை கொண்டுள்ளது. கபம், வடிவமைப்பு, நிலைத்தன்மை உள்ளிட்டவற்றிற்கு பயன்படுகிறது. போதிய நீர்ச்சத்துடன் உடல் இருக்கும்போது, கபம் சமமடைந்து, நெரிசல் மற்றும் மந்தம் ஆகியவற்றை தடுக்கிறது.
ஆயுர்வேதமும், சிறுநீர் ஆரோக்கியமும்
ஆயுர்வேதத்தின்படி, சிறுநீரகம் உடலின் உட்புற சமநிலையை பேணுவதில் முக்கிய உறுப்பாகிறது. சிறுநீரகம், தேவையற்ற தண்ணீர் மற்றும் உடலில் தேங்கும் அதிகப்படியான நீர் ஆகிய அனைத்தையும் வடிக்கிறது. அது உடல் ஒட்டுமொத்தமாக கழிவுநீக்கம் செய்வதில் முக்கிய பங்குவகித்து, உடல் ஆரோக்கியத்தை பேணுகிறது.
சூடான தண்ணீர் பருகுங்கள்
ஆயுர்வேதம், நாள் முழுவதும், சூடான தண்ணீரை பருகவேண்டும் என்று வலியுறுத்துகிறது. அது சிறுநீரகங்களை அதிகம் துன்புறுத்தாமல், செரிமானத்தை இலகுவாக்குகிறது.
மூலிகை தேநீர்
கொத்தமல்லி அல்லது சோம்பு டீ போன்ற ஆயுர்வேத பொருட்களை உட்கொள்வது, உடலை ஆரோக்கியத்துடனும், நீர்ச்சத்துடன் வைக்கிறது. மேலும் சிறுநீரகம் இயங்குவதற்கு உதவுகிறது.
துளசி
துளசியில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், ரத்த அழுத்தத்தை பராமரிக்கவும் உதவுகிறது. தினமும் 6-8 துளசி இலைகளை மென்று சாப்பிடுவது, உடலில் அழற்சி ஏற்படுவதை தடுக்கிறது. இதில் உள்ள அதிகப்படியான மெக்னீசியம், உங்கள் தசைகளை வலுப்படுத்துகிறது. ரத்த நாளங்களை ஓய்வடையச் செய்கிறது.
அதிக குளிர்ச்சியான நீரை தவிர்க்க வேண்டும்
குளிர்ச்சியான பொருட்கள் அதிகம் பருகும்போது அது உங்கள் உடலின் செரிமான சக்தியை குறைக்கிறது. அது வாதம், பித்தம் மற்றும் கபம் மூன்றின் சமநிலையையும் குலைக்கிறது. எனவே இளஞ்சூடான தண்ணீரை பருகுங்கள் அல்லது அறை வெப்பநிலை தண்ணீர் சிறந்தது.
நீர்ச்சத்துடன் இருங்கள்
உங்கள் உடல் கொடுக்கும் அறிகுறிகளுக்கு ஏற்ப நடந்துகொள்ளுங்கள். தாகம் எடுத்தால் தண்ணீர் பருகுங்கள். குறைவான நேரத்தில் அதிக தண்ணீர் பருகுவதை தவிர்க்க வேண்டும். தாகம் எடுக்கும் வரை தண்ணீர் பருகாமல் இருக்காதீர்கள்.