இந்தியா வரும் பிரான்ஸ் அதிபருக்கு ஜெய்பூரில் மிக பிரமாண்ட வரவேற்பு..!

வரும் ஜனவரி 26 அன்று இந்தியாவின் 75-வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் வகையில் பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மேக்ரான் (Emmanuel Macron) இந்தியாவிற்கு வர உள்ளார்.

முன்னதாக ஜனவரி 25 அன்று பிரான்ஸ் அதிபருக்கு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில், மிக பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி அளிக்கப்பட உள்ளது.தற்போது இந்தியா வரும் மேக்ரானின் சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.ராணுவ மற்றும் தொழில்துறைகளில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.இரு துறைகளுக்கும் தேவைப்படும் உபகரண உற்பத்தியில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என தெரிகிறது.

குறிப்பாக, கனரக விமான எஞ்சின்களை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்ய பிரான்ஸின் உதவி பெறப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.மேக்ரானின் வருகை சம்பந்தமான முன்னேற்பாடுகள் குறித்து இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரான்ஸ் அரசாங்க ஆலோசகர் எம்மானுவல் பான் (Emmanuel Bonne) ஆகியோர் கலந்து ஆலோசித்து வருகின்றனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *