ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள மைசூர் சாண்டல் சோப் மோசடி..!

கர்நாடகா அரசின் கீழ் செயல்பட்டு வரும் கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜெண்ட்ஸ் லிமிடெட் (KSDL) என்ற பொதுத்துறை நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு வருவது தான் இந்த மைசூர் சாண்டல் சோப். நாட்டின் மிகவும் பழமையான சோப் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. 1916ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

இந்த மைசூர் சாண்டல் சோப்.100 சதவீத சந்தன எண்ணெய் மூலம் தயாரிக்கப்படுகிறது. இத்தகைய தயாரிப்பு முறை உலகிலேயே வேறு எங்கும் பார்க்க முடியாது. எனவே மைசூர் சாண்டல் சோப்பிற்கு தனிச் சிறப்பு உண்டு. இதற்கான காப்புரிமையை கர்நாடகா அரசின் KSDL நிறுவனம் தான் வைத்திருக்கிறது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் கும்பல் ஒன்று போலியான மைசூர் சாண்டல் சோப்பை தயாரித்து வருவதாக மாலக்பேட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நேரில் சென்று விசாரித்ததில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பெட்டி பெட்டியாக, சோப்புகள் கட்டி கட்டியாக என ஏராளமாக கைப்பற்றப்பட்டன. சோப்புகளின் மதிப்பு மட்டுமே 2 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். இதையடுத்து சோப்பு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களை கைப்பற்றினர்.உடனடி அங்கிருந்த இருவரை கைது செய்தனர். அவர்கள் ராகேஷ் ஜெயின், மகாவீர் ஜெயின் ஆவர். இந்த இருவரும் கூட்டாக சேர்ந்து தான் போலியான சோப்புகளை தயாரித்து விற்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக மைசூர் சாண்டல் சோப் மோசடி குறித்த விஷயங்கள் தான் பேசுபொருளாக மாறியுள்ளன. இந்த போலி சோப்புகள் ஹைதராபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *